கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த அபிஷேக் சர்மா..! ஐசிசி டி20 தரவரிசையில் அசத்தல்!
ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா. இங்கிலாந்து உடனான 5ஆவது டி20 போட்டியில் அதிரடியாக சதமடித்த அபிஷேக் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 4-1 என தொடரை வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
திலக் வர்மா 3ஆம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். அடுத்தடுத்த வரிசையில் பிலிப் சால்ட், சூர்யகுமார் யாதவ், ஜாஸ் பட்லர் ஆகியோர்கள் இருக்கிறார்கள்.
முதலிடத்தில் ஆஸி. அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் இருக்கிறார்.
24 வயதாகும் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் பாணி முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் மாதிரி இருப்பதாக பலரும் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். யுவராஜ் சிங்தான் அபிஷேக் சர்மாவுக்கு பயிற்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசை
1. டிராவிஸ் ஹெட் - 855 புள்ளிகள்
2. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள்
3. திலக் வர்மா - 803 புள்ளிகள்
4.பிலிப் சால்ட் - 798 புள்ளிகள்
5. சூர்யகுமார் யாதவ் - 738 புள்ளிகள்
6. ஜாஸ் பட்லர் - 729 புள்ளிகள்