``மொழிபெயர்ப்பில் உணர்வை கடத்த வேண்டும்.!" - மொழிபெயர்பாளர் அரவிந்தன்
453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு; ஆங்கிலேயர் கால பீரங்கி குண்டுகள்! - தொல்லியல் மாணவர்கள் கண்டெடுப்பு
நெல்லை மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மன்னர் காலத்து பல்வேறு கல்வெட்டுகள், ஆய்வில் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர் பிரித்திவிராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின்போது ஊராட்சி ஒன்றியத்தின் கல்வெட்டுக்கு அருகே கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தார். இதனையடுத்து பல்கலைத் தொல்லியல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கல்வெட்டு உள்ள ஒரு தூணின் ஒரு புறத்தில் சங்கு, சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதன் கீழ்புறம் தற்கால தமிழ் வாசகங்கள் தொடங்குகின்றன. இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 748, தை மாதம் 28-ம் நாள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இக்கல்வெட்டு 453 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தொல்லியல்துறையின் உதவிப்பேராசிரியர் மதிவாணன், முருகன் மற்றும் தொல்லியலாளர் மீனா ஆகியோர் ஆய்வு செய்து கூறினர். அக்காலத்தில் மன்னர்களோ அல்லது செல்வந்தர்களோ கோயிலின் நித்திய பூசைகளுக்காக நிலங்களை வழங்கியதை இக்கல்வெட்டு கூறுகிறது.
அக்கல்வெட்டில் திருவேங்கடநாதர் என்ற கடவுளின் பெயரைக் கொண்டுள்ளது. இக்கல்வெட்டில் காணப்படும் ”புறவாரி” என்ற சொல், தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் மீதான அரசு வரிகள் நீக்கப்பட்டு அந்த வருமானம் முழுவதும் கோயிலுக்கு சென்றடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதற்கிடையில், அப்பகுதியில் கருங்கல்லால் ஆன பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரத்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய வாகை மரம் பட்டுப்போயி விழுந்ததாகவும், அதன் வேர்ப்பகுதியில் இதுபோன்ற பீரங்கு குண்டுகள் காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த குண்டுகள் பெரும்பாலும் 2 முதல் 3 அங்குல விட்டத்துடனும் காணப்படுகிறது. இவை ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும், இவற்றின் மூலம் இதன் மூலம் 450 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறை ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தொல்லியல்துறை பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.






















