செய்திகள் :

``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்

post image

நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.

எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்தார்.

செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்

மூத்த அரசியல் தலைவரும், அதிமுக தொண்டர்களின் மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவரான செங்கோட்டையன் இப்போது தவெகவில் இணைந்திருப்பது அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர், இப்போது விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். விஜய்யின் தவெக அரசியல் பயணத்தில் மிகப்பெரிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், "20 வயதில் இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அதிமுகவில் சேர்ந்தவர். அந்த சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.

அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், அவருடைய அரசியல் அனுபவம், களப்பணிகளின் அனுபவங்கள் எல்லாம் பெரும் உறுதுணையாக இருக்கும். அவருடன் இணைந்து கைகோர்த்திருக்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்.

நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். வெற்றி நிச்சயம்" என்று காணொலி மூலம் பேசியிருக்கிறார்.

TVK: காத்திருந்த விஜய்; ஆதவ்வோடு வந்த செங்கோட்டையன்; மேற்கு மண்டல பொறுப்பு - பனையூர் பரபர

நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். இன்று (நவ 27) செங்கோட்டையன், அவர்களது ஆதரவாளர்கள் சிலருடன் விஜய் முன்... மேலும் பார்க்க

TVK: பனையூரில் செங்கோட்டையன்; திடீர் தள்ளுமுள்ளு; மன்னிப்பு கேட்ட ஆதவ், சி.டி.ஆர் - நடந்தது என்ன?

செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.இந்நிலையில் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று முன்தினம்(நவ.25) கோவையிலிருந்து சென்னை வ... மேலும் பார்க்க

``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேராக பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய... மேலும் பார்க்க

தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!

தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இர... மேலும் பார்க்க

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்க... மேலும் பார்க்க

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்பு... மேலும் பார்க்க