செய்திகள் :

'6 தொகுதிகள் கொடுத்தே ஆகணும்' - கறார் காட்டும் கம்யூனிஸ்டுகள்; கைவிரித்த திமுக!

post image

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தி.மு.க-வின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக செல்லவில்லை எனவும் தி.மு.க இறங்கி வர மறுக்கிறது என குமுறுகிறார்கள் தோழர்கள். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸுடனான கடும் இழுபறிக்கு பிறகு 28 தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் ஒதுக்கியது தி.மு.க. அதைதொடர்ந்து 'எங்களுக்குள் கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என கச்சைக்கட்டத் தொடங்கினார்கள் இதர கூட்டணிக் கட்சிகள்.

ஸ்டாலின் - பெ.சண்முகம்
ஸ்டாலின் - பெ.சண்முகம்

தொகுதி பங்கீடு குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ, சி.பி.எம் நிர்வாகிகள், "இந்த தேர்தலில் எப்படியாவது கூடுதல் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம். ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போதே தொகுதிகள் குறைக்கப்படும் என்பதை நாசுக்காக சொல்லிவிட்டது தி.மு.க பேச்சுவார்த்தை குழு. ஆரம்பத்தில் இப்படித்தான் பேசுவார்கள், எப்படியும் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தி.மு.க தனது கறார் தன்மையிலிருந்து இறங்கிவரவில்லை" என்றனர்.

'கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?' என சில விவரப்புள்ளிகளிடம் கேட்டோம் "கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால் 4 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்றது தி.மு.க-வின் பேச்சுவார்த்தை குழு, ஆனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 8 இடங்கள் எதிர்பார்த்தன. சி.பி.ஐ-யின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் அவர் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படாததால் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் முதல்வர் சந்தித்தும் முறையிட்டனர். அதன்பின்னர் 4 தொகுதியிலிருந்து 5 தொகுதிகள் தர முன்வந்திருக்கிறது தி.மு.க தலைமை.

பாலன் இல்லம்

கூடுதல் தொகுதிகள் தராவிட்டாலும் பரவாயில்லை, கடந்தமுறை பெற்ற 6 தொகுதிகளை தாருங்கள் என்றிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட். ஆனால் கடைசிவரை 5 தொகுதிகளை தி.மு.க தாண்டவில்லை. ஆகையால் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைகிறார்கள் சி.பி.ஐ கட்சியினர். அதேபோல் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், 6 தொகுதிகளை போராடியாவது பெற்றாக வேண்டும் என்றிருக்கிறார். ஆனால் கம்யூனிஸ்ட் எவ்வளவு போராடினும் 5 தொகுதிகள்தான் என்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறார்கள்" என்றனர்

இந்த ரேஸில் யார் வெல்கிறார்கள் எனப் பார்ப்போம்!

இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இதில் வீடு அல்லது மனைப் பத்திரப்பதிவில் மத்திய அரசு விதிகளைச் சற்று எளிதாக்கி உள்ளது. இதுவரை, வீடு அல்லது மனையை ரூ.10 லட்சத்... மேலும் பார்க்க

'நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் வேல்முருகன்!' - கூடுதல் தொகுதி கிடைக்குமா? த.வா.க ப்ளான் என்ன?

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறார். த.வா.க-வுக்கு ஒதுக்கும் 1 தொகுதியில் வேல்முருகனே களமிறங்குவார் எனச் சொல்லப்பட்ட சூழலில் 'த.... மேலும் பார்க்க

'உதயசூரிய'னில் நிற்க வற்புறுத்தும் திமுக - உயர்நிலைக் குழுவை அவசரமாக‌ கூட்டிய மதிமுக‌!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. இருக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா என கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் விவா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு நிலவரம்! எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?

அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலை ஆரம்பித்து ஒரு வாரம் கடந்து விட்டது.'அமெரிக்கப் படைகளுக்கு தளம் அமைக்க உதவுகின்றன' எனச் சொல்லி வளைகுடா நாடுகள் சி... மேலும் பார்க்க

LPG சிலிண்டர் தட்டுப்பாடு: `பொறுப்புள்ள அரசாக இதைச் செய்ய வேண்டும்!'- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாய... மேலும் பார்க்க

'உதயசூரியன் சின்னம்' - மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக; டென்ஷனில் துரை வைகோ?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் அக்கட்சியின் முத... மேலும் பார்க்க