Olympics 2028: "ஒலிம்பிக்கில் விளையாடுவதுதான் என்னுடைய ஆசை; ஆனால்" - மனம் திறக்க...
`8 ஆண்டுகளுக்கு முன்' அலுவலகத்தில் பெண்ணுடன் கர்நாடக டிஜிபி ஆபாச செயல்; அதிர்ச்சி வீடியோ, சஸ்பெண்ட்
கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண்களுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது.
அதோடு அந்த பெண்ணுடன் ராமச்சந்திர ராவ் பேசிய சில ஆடியோக்களும் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அவை உண்மையானதுதானா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் இவ்விவகாரத்தில் மாநில முதல்வர் சித்தராமையா உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.
அந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து இது குறித்து விசாரணை முழுமையாக விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் ராமச்சந்திர ராவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ராமச்சந்திர ராவ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் காலத்தில் ராமச்சந்திர ராவ் போலீஸ் தலைமை அலுவலகத்தை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கேயும் செல்வதாக இருந்தால் எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். ஆபாச வீடியோ வெளியானவுடன் ராமச்சந்திர ராவ் மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வராவை அவரது இல்லத்தில் சந்தித்து பேச சென்றார். ஆனால் அமைச்சர் அவரை சந்தித்து பேச மறுத்துவிட்டார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம்
இந்த ஆபாச வீடியோ சர்ச்சை குறித்து ராமச்சந்திர ராவ்,'' இந்த வீடியோ போலியானது. தவறானது. இதனை பார்த்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். இது அனைத்தும் ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யுமாகும். அந்த வீடியோ முற்றிலும் போலியானது. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது எப்படி, எப்போது நடந்தது, அதை யார் செய்தார்கள் என்பது பற்றியும் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த காலகட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் பெலகாவியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்தபோது இது நடந்திருக்கலாம். நான் எனது வழக்கறிஞரிடம் பேசுவேன்'' என்று தெரிவித்தார்.
மாநில அரசு இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. ராமச்சந்திர ராவை மாநில அரசு காப்பாற்ற முயற்சிப்பதாக பா.ஜ.க எம்.எல்.ஏ.சுரேஷ் குமார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''போலீஸ் அதிகாரியின் செயல்கள் மன்னிக்க முடியாத குற்றம். அவை காவல்துறை மீது சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. இந்தச் சம்பவம் அலுவலகத்தில், மூவர்ணக் கொடி பின்னணியில் இருக்கும்போது நடந்திருக்கிறது. இதன் மூலம் அந்த அதிகாரி தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்துள்ளார் என்பதைக் காட்டுகிறது'' என்று தெரிவித்தார். இது குறித்து குறித்து சமூக ஆர்வலர் ராஜசேகர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
தங்கம் கடத்திய நடிகையின் தந்தை!

டிஜிபி ராமச்சந்திர ராவ் நடிகை ரம்யா ராவ் தந்தையாவார். கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக ரன்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். இதையடுத்து ரன்யா ராவ் தனக்கு தெரிந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் தனது மகள் ரன்யா ராவை காப்பாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு ரன்யா ராவ் பிடிபடுவதற்கு முன்பு ரன்யா ராவ் பல முறை தங்கம் கடத்தி வந்துள்ளார். அப்போதெல்லாம் பாதுகாப்பு சோதனையில் இருந்து தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் மகள் ரன்யா ராவை ராமச்சந்திர ராவ் காப்பாற்றியதாக கூறப்பட்டது.
ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது ராமச்சந்திர ராவ் பணியில் இருந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்படார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ராமச்சந்திர ராவ் குடியுரிமை அமலாக்கப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

















