Dhanush: "எனக்கு லவ் ஃபெயிலர் முகம் இருக்கிறதா!" - நிகழ்வில் தனுஷின் ஜாலி டாக்!
AR Rahman: "எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது பிரச்சனை!" - ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. தனுஷ், கிரித் சனூன் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கியிருக்கிறார்.

இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் இப்போது ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். யூடியூபர் நிகில் காமத்துக்கு அளித்த பேட்டியில் அவர் அனைத்து மதங்களையும் மதிப்பது குறித்தும், சூஃபி மதம் குறித்தும் பேசியிருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மானின் உண்மையான பெயர் திலீப் குமார். 23 வயதில் அவர் மதம் மாறிய பிறகுதான் ஏ.ஆர். ரஹ்மான் எனப் பெயரை மாற்றிக் கொண்டார் என்ற தகவல் பலரும் அறிந்ததே.
அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான், “இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன். எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது, தீங்கு செய்வது மட்டும் பிரச்னை.
மக்களை எண்டர்டெயின் செய்வது எனக்குப் பிடிக்கும். நான் மேடையில் நின்று பாடும்போது அது ஒரு கோவில் போன்ற உணர்வை எனக்குத் தரும்.
அங்கே பல மதத்தவரும், பல மொழிகளில் பேசும் மக்களும் ஒன்றாக இணைந்து மகிழ்கிறார்கள்” என்றவர் சூஃபிசம் குறித்து, “நம்முள் உள்ள ஆசை, பேராசை, பொறாமை என அனைத்தும் மறைந்து போக வேண்டும்.

அப்போதுதான் அகங்காரம் அழிந்து, கடவுள் போல ஒரு தெளிவான நிலைக்கு நாம் வர முடியும்.
நாமெல்லாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அந்த நம்பிக்கையின் உண்மையான நேர்மையே முக்கியம். அதுதான் மனிதர்களை நல்ல செயல்களுக்கு இட்டுச் செல்கிறது” எனப் பேசியிருக்கிறார்.



















