செய்திகள் :

AVM Saravanan: "அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்"- கண்ணீரில் சிவகுமார்

post image

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது.

சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்பட பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே கிடையாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஏ.வி.எம் சரவணன்
ஏ.வி.எம் சரவணன்

1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது.

என்னுடைய சொந்தபெயர் பழனிசாமி. இந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார்தான்.

அவரின் நியாபக அர்த்தமாகத்தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன்.

என்னுடைய முதல் படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன்.

அப்போது சரவணன் சார் என்னிடம் "மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம்" என்று சொன்னார்.

அதன்பிறகு 'உயர்ந்த மனிதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று.

என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு 'பேரழகன்', 'அயன்' படங்களைக் கொடுத்தார்கள்.

சிவகுமார் - சூர்யா
சிவகுமார் - சூர்யா

இரண்டுமே வெற்றி படங்கள். சூர்யா வாழ்வில் மறக்கமுடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள்.

தமிழ் சினிமாவில் பல ஹிட்டான படங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்

முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்... மேலும் பார்க்க

AVM Saravanan: "தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு"- வைகோ

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்... மேலும் பார்க்க

AVM: ``என் கஷ்ட காலங்களில்" - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித... மேலும் பார்க்க

AVM Saravanan: " 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்"- இயக்குநர் வசந்த்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்குப் பிறகு பொறுப்பெடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன்.ஏராளமான வெற்றிப் ... மேலும் பார்க்க

AVM: ``முரட்டுக்காளை வந்தபோது சரவணன் சாருக்கு கடிதம் எழுதினேன்" - நினைவுகளைப் பகிரும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களை தயாரித்த... மேலும் பார்க்க