செய்திகள் :

AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா..." - நடிகை ராணி

post image

சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். 'சொர்க்கம்', 'ஆசை' உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம்.

''டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணும்கிற நோக்கத்துலதான் சீரியல் தயாரிப்புல ஏவிஎம் நிறுவனம் இறங்குனதா என் அப்பா சொல்வார். ஷூட்டிங் ஷெட்யூல், சம்பளம் எல்லாமே அவ்வளவு ஒரு புரஃபஷனலா இருக்கும்.

ராணி
ராணி

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்பவாவது திடீர்னு வந்துட்டுப் போவார்.

ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பாராட்டணும்னாகூட ஷூட்டிங் ஸ்பாட்டுல பார்க்குற இடத்துல அதைச் செய்ய மாட்டார். அப்படி பண்றது தப்புன்னு சொல்வார். ஆபீஸுக்கு கூப்பிட்டு விட்டுதான் 'நல்லா பண்றீங்க'னு சொல்லி பாராட்டுவார்.

சம்பள விஷயத்துல யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் இருக்காது. ஏவிஎம் நிறுவனத்துல ஒர்க் பண்றோம்னா பேங்க் லோன் உடனே கிடைக்கும்.

அதேபோல ஏவிஎம் மெகா சீரியல்னா 15 நாள் வேலை கியாரண்டி. இன்னைக்கு மாதிரி சூழல் கிடையாது.

அவரும் ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன் உட்பட எல்லார் மீதும் அக்கறையா இருப்பார். யூனிட்டும் படு நேர்த்தியா இருக்கும்.

சரவணன்
சரவணன்

என்னைப் பொறுத்தவரை அம்மா வீடுனனு சொல்வேன். ஒரு குழந்தைக்கு சாப்பாடு தர்றது அம்மாதானே. ஏவிஎம் தயாரிச்ச முக்கால்வாசி தொடர்கள்ல எனக்கு கேரக்டர் தந்திடுவாங்க. அதனாலதான் அம்மா வீடுன்னு சொல்றேன். அவரோட நாலஞ்சு தடவைதான் பேசியிருப்பேன். நான் இன்டஸ்ட்ரியில பார்த்தவங்கள்ல அவ்வளவு ஒரு மேன்மையான மனுஷன்.

அவங்க சீரியல் தயாரிப்புல இருந்து ஒதுங்கினாங்கன்னு கேள்விப்பட்டப்போ எனக்கு அவ்வளவு வருத்தமா இருந்தது. சரவணன் சார் அவருடைய அப்பாவுக்குப் பிறகு தொழிலை எப்படிக் கட்டிக் காத்தாரோ அதேபோல அவருடைய பிள்ளைகளும் பண்ணியிருக்கலாம். அந்த ஸ்டூடியோ வேறு வேறு இடங்களா மாறுகிற காட்சிகளைப் பார்க்குறப்ப அவ்வளவு பாரமா இருக்கு மனசு'' என்கிறார் இவர்.

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள்.அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறக... மேலும் பார்க்க

BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

Vikatan Digital Award: ``அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' - தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் 'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன்... மேலும் பார்க்க

BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்... மேலும் பார்க்க