செய்திகள் :

Ban NEET போராட்டம்: ``அடிக்காதீர்கள் என காலில் விழுந்து மாணவர்கள் கெஞ்சினார்கள் " - நடிகை ரேவதி

post image

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நடிகையும் இயக்குநருமான ரேவதி, ``இன்றைய சூழலில் நீட் தேர்வு குறித்து விரிவாகப் பேச எனக்கு முழுமையான அறிவு மற்றும் தரவுகள் போதாது.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

இருப்பினும், நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட இளம் மாணவர்களின் போராட்டமும், அதற்கு எதிரான அடக்குமுறைகளும் என்னை மிகவும் பாதித்தது. தடியடியின் போது காலில் விழுந்து அடிக்காதீர்கள் என மாணவர்கள் கெஞ்சினார்கள். அந்த வீடியோக்களையெல்லாம் பார்க்கும்போது மனம் வெதும்பியது. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்திற்காக ஜூலை மாதக் கடும் குளிரிலும் மழையிலும், தரையில் தங்கி 25 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 16 வயது சிறுவன் ஒருவன், 'நான் தவறு எதுவும் செய்யவில்லை, என் உரிமைகளுக்காகவும் டாக்டர் கனவுக்காகவுமே இங்கு நிற்கிறேன்' என்று தைரியமாக வாதிட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

முந்தைய தலைமுறையினர் அச்சம் காரணமாகத் தட்டிக் கேட்கத் தயங்கிய பல விஷயங்களை, இன்றைய 'ஜென்-ஜி' தலைமுறையினர் எந்தவித பயமுமின்றி, தங்களுக்குரிய உரிமைகளை உணர்ந்து துணிச்சலாகக் கேட்கின்றனர். காவல்துறையினர் அடிக்க வரும்போது, தேசிய கீதத்தைப் பாடி அவர்களை அமைதியடையச் செய்யும் அவர்களின் புத்திசாலித்தனமான அணுகுமுறை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

எனவே, மற்றவர்கள் சொல்வதைக் கிளிப்பிள்ளை போல் திரும்பச் சொல்லாமல், கேள்வி கேட்டு, ஆராய்ந்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் இந்த இளைய தலைமுறையின் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. முந்தைய தலைமுறை செய்யத் தவறியதை இவர்கள் செய்கிறார்கள். இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடக் கூடாது, அதே சமயம் கல்வியையும் கேள்வி கேட்கும் குணத்தையும் எப்போதும் விட்டுவிடக் கூடாது. இளைஞர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்குத் என் முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன்." என்றார்.

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க