``ஸ்மிருதி மந்தனா திருமண தடை; நான் அவரை காப்பாற்றி உள்ளேன்'' - சாட்டிங் செய்த ப...
BB Tamil 9: "சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க"- கோபப்பட்ட சபரி; அழுத அரோரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள்.
முதலில் புரொமோவில் வியானாவுக்கும், அமித்துக்கும் சண்டை நடந்த நிலையில் இரண்டாவது புரொமோவில் சபரிக்கும், அரோராவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

"சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க. நான் மாத்திரை சாப்பிடணும். என்னோட பழத்தை யாரு எடுத்து வச்சுருக்கீங்க. பசிக்குது எனக்கு" என சபரி அரோராவிடம் சொல்ல" நீ என்னோட பழத்தை எடுத்து சாப்பிடு. யார் உன்னோடதை எடுத்து வச்சுருக்காங்கனு சொல்றேன்" என அரோரா சொல்கிறார். உடனே சபரி கோபப்பட்டு கத்துகிறார்.











.jpeg)







