சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள விடற்றோருக்கான இரவு நேர காப்பகம் – திறந்து வைத்த ...
BB Tamil 9: "பேட் டச்சுன்னு சொல்லி பாரு கம்ருதீனை வெளியே அனுப்ப நினைக்கிறாங்க"- திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது.
இதனிடையே இன்று வெளியான முதல் இரண்டு புரொமோவிலும் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், "பார்வதி பத்தி எனக்குத் தெரியும்.
அவங்கனால கம்ருதீன் கேம் பாதிக்கப்பட்ருச்சுன்னு எல்லாரும் சொன்னதுனால பேட் டச்சுன்னு ஒரு விஷயத்தை முன்னாடி வச்சு எப்படியாச்சும் கம்ருதீனை வெளியே அனுப்பணும்'னு நினைக்கிறாங்க.
100 நாள் இந்த வீட்டுல இருக்கணும்'னு பார்வதி ஒரு கேம் விளையாடுறாங்க. இதெல்லாம் என்ன நியாயம்" என்று திவ்யா சாண்ட்ராவிடம் சொல்கிறார்.


















