கௌரி கிஷன் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாத...
BB Tamil 9: "Best Performer யார்?" - பிக் பாஸ் கேட்ட கேள்வி; ஹவுஸ்மேட்ஸ் சொன்ன பதில் என்ன?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருந்தனர்.
வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடித்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில், 'பெஸ்ட் பெர்ஃபார்மர் யாரு?' என பிக் பாஸ் கேட்க, வினோத், பிரவீன், சுபிக்ஷா என ஹவுஸ் மேட்ஸ் பலரும் விஜே பார்வதியைச் சொல்கின்றனர்.

இதனால் பார்வதி ஹவுஸ் மேட்ஸ்க்கு நன்றி கூறி நெகிழ்கிறார்.
















