செய்திகள் :

Bhagyasri : "அன்று என் அப்பா வேலைக்காக கெஞ்சியதை பார்த்திருக்கிறேன்!" - உருகும் பாக்யஸ்ரீ போர்ஸ்

post image

டோலிவுட் நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் புரோமோஷனில் பாக்யஸ்ரீ போர்ஸ் கொடுத்த நேர்காணலில் அவருடைய தந்தை குறித்தும், அவருடைய சிறுவயது வாழ்க்கை குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.

Lenin Movie - Akhil Akkineni
Lenin Movie - Akhil Akkineni

அந்தப் பேட்டியில் அவர், "நான் பிறந்த அன்றே வாழ்க்கையின் மிகக் கடினமான இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். என் பெற்றோர் மிகவும் ஏழ்மையான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்று நாம் பார்க்கும் எந்தவொரு நிம்மதியான, நிலையான வாழ்க்கையையும் என் சிறுவயதில் நான் பார்த்ததே இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சினை என் பெற்றோருக்கு வந்துகொண்டே இருக்கும்.

ஆனால், தங்கள் குழந்தைகளுக்கு நல்லதைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால், நாங்கள் முற்றிலும் பூஜ்ஜியத்திலிருந்து எங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்.

ஒரு குழந்தையாக இருக்கும்போது பணத்தின் முக்கியத்துவம் நமக்குத் தெரியாது. சாப்பாடு, விளையாட்டு மட்டும்தான் நம் உலகமாக இருக்கும். ஆனால், என் அம்மா ஒரு டைரியில் 10 ரூபாய்க்குப் பச்சை மிளகாய், 10 ரூபாய்க்குப் கீரை என எழுதியிருந்த கணக்குகளை நான் பார்த்திருக்கிறேன்.

'இந்த வாரம் 300 ரூபாய் செலவாகிவிட்டது, அடுத்த வாரத்தை எப்படி ஓட்டுவது?' என்று அவர்கள் கணக்குப் போட்டு வாழ்ந்தார்கள். நம் கண்முன்னாடியே பெற்றோர் நமக்காக உழைப்பதையும் கஷ்டப்படுவதையும் பார்க்கும்போது அது மனதை உலுக்கும்.

என் அப்பா இன்னொருவரிடம் போய், 'எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், தயவுசெய்து எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுங்கள்' என்று கெஞ்சிக் கேட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

Bhagyashri Borse
Bhagyashri Borse

ஒரு சிறு குழந்தையாக, தன் தந்தை அப்படி கேட்பதை எந்த ஒரு மகளும் பார்க்க விரும்ப மாட்டாள். அந்தத் தருணத்தில் என் மனதில் ஒன்றுதான் ஓடியது. 'இனி ஒருபோதும் என் அப்பா இந்த நிலைக்கு வரக் கூடாது.

நான் பெரியவளாக வளர்ந்து என் அப்பாவின் தலை எப்போதும் நிமிர்ந்து வாழும்படி செய்ய வேண்டும்' என்று சபதம் எடுத்தேன்.

அது சோகமான ஒன்றுதான், ஆனால் என் வாழ்க்கையில் முன்னேற அதுவே எனக்குப் பெரிய உத்வேகமாக அமைந்தது. இன்று எனக்குள் இருக்கும் லட்சியங்கள் எல்லாமே என் பெற்றோருக்காக மட்டும்தான்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் 'சேயோன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Jr NTR: அரசியலுக்கு வருகிறாரா ஜூனியர் என்.டி.ஆர்!? - என்ன சொல்கிறது அவரின் குழு?

டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசியலோடு நீண்ட காலத் தொடர்பு உண்டு. அதனால் தான், அவரைப் பற்றி வெளியாகும் சிறு அரசியல் செய்திகூட பெரும் வைரலாகப் பேசப்படுகிறது. சமீபத்தில், ... மேலும் பார்க்க

Samantha: `கிளாமருக்கு மட்டும்தான் ஹீரோயினா?; சாதித்த `மா இன்டி பங்காரம்' - சமந்தா நெகிழ்ச்சி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது... மேலும் பார்க்க

Jaya Janaki Nayaka: தியேட்டரில் தோல்வி, யூடியூபில் சாதனை! 100 கோடி views கடந்த முதல் இந்தியப் படம்!

திரையுலகைப் பொறுத்தவரை ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது அதன் திரையரங்க வசூலை வைத்தே பெரும்பாலும் கணிக்கப்படுகிறது. ஆனால், காலமாற்றத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப வெற்றிக்கான இலக்கணங்களும்... மேலும் பார்க்க

Maa Inti Bangaaram Review: `லியோ', `பாட்ஷா' மோடில் சமந்தா; ஆக்ஷனில் ஜொலிக்கிறதா `எங்கள் தங்கம்'?

நல்லதொரு மருமகளாகப் பேர் எடுக்க நினைக்கும் பெண்ணுக்குப் பின்னாலிருக்கும் ஆக்ஷன் பக்கங்களே கதை!ஸ்வர்ணாவை (சமந்தா) காதல் திருமணம் செய்ததால், அனிருத் (திகந்த்) தன் குடும்பத்திடமிருந்து பிரிந்திருக்க வேண்... மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டியின் கையைத் தொட்டுப் பேசிய இயக்குநர் - கண்டிக்கும் நெட்டிசன்கள்!

தெலுங்குத் திரையுலகின் மூத்த இயக்குநர் கே.ராகவேந்திர ராவ், ஹைதராபாத்தில் நடைபெற்ற புதிய திரைப்படத் தொடக்க விழாவில் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது... மேலும் பார்க்க