செய்திகள் :

Bharathiraja: "ரெட்டை சடை பின்னல் போட்ட மாதிரி உன்னை வச்சு ஒரு படம்" - பாரதிராஜா குறித்து குஷ்பு | Live Updates

post image

விஜய் நேரில் அஞ்சலி

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

அங்கே நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகை குஷ்பு:

"நாம் எல்லாரும் அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்த லெஜண்டரி இயக்குநர், நம்முடைய அன்பிற்குரிய பாரதிராஜா அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.

அவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு ஒரு கருமேகம் சூழ்ந்தது போன்ற பேரிழப்பாகும். அவர் எடுத்த படங்கள் என்றும் அழியாத மைல்கற்கள். இன்னும் சொல்லப்போனால் அவைதாம் சினிமா உலகிற்கான நிஜமான பாடம்.

ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு மாபெரும் பாரம்பர்யத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

அவர் எப்போதும் என்னிடம், 'நாம ரெண்டு சடை பின்னல் போட்ட மாதிரி உன்னை வச்சு ஒரு படம் பண்ணலாம்' என்று கூறுவார். அது இனி நிறைவேறாத ஒரு கனவாகவே எஞ்சியிருக்கும். உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் சார்.

அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.

ஓம் சாந்தி".

 குஷ்பு
குஷ்பு

சென்னையில் இன்று 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த இரங்கல்களின் பதிவுகள் இதோ...

"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" - ஸ்டாலின் நேரில் அஞ்சலி

'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை..."தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்... மேலும் பார்க்க

Bharathiraaja: 'சட்டையை பிடித்து வெளியே தள்ளினார்கள்!' - சபதம் எடுத்து வென்ற பாரதிராஜா!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். சினிமாவின் அத்தனை முன்னேற்றங்களிலும் பாரதிராஜாவின் த... மேலும் பார்க்க

'இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!' - நடிகர் சிரஞ்சீவி

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், " இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான ப... மேலும் பார்க்க

"பாரதிராஜாவின் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும்" - முதல்வர் விஜய்க்கு சித்ரா லக்ஷ்மணன் கோரிக்கை

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சும... மேலும் பார்க்க

`உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா.!' - மறைந்த இயக்குநர் இமயத்தின் புகைப்பட நினைவலைகள்

பாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜா மேலும் பார்க்க

'முகங்களுக்கு முகவரி கொடுத்த இமயம்' - பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார்?

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூன்.10) காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1977-ம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த '16 வயதினிலேயே' படத்த... மேலும் பார்க்க