Eggless Cakes: `சாக்லேட் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?
Career: சென்னையில் ரிசர்வ் வங்கி வேலை; எவ்வளவு சம்பளம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
ஆபீஸ் அட்டென்டன்ட்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 572; தமிழ்நாட்டில் 9.
வயது வரம்பு: 18 - 25 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.24,250
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, மொழித் திறன் தேர்வு.
குறிப்பு: எந்த மாநிலத்தில் இருந்து விண்ணப்பிக்கப்படுகிறதோ, அந்த மாநிலத்தின் மொழி தெரிய வேண்டும்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கெங்கே?
சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தருமபுரி.
ஆன்லைன் தேர்வு தேதி: அநேகமாக பிப்ரவரி 28 & மார்ச் 1, 2026
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4, 2026
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!






















