Couple Relationship: திருமண வாழ்க்கை சீராக செல்ல 10 வழிமுறைகள்..!
1. துணையின் உணர்வுகளை (feeling) புரிந்துகொள்ள வேண்டும். உறவுகள் வலுப்பெற வேண்டுமானால், உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது முக்கியம்.
2. துணையிடம் தன் கடந்த காலத்தில் நடந்தவற்றில் எதை கூற வேண்டும், எதை கூறக்கூடாது என்ற தெளிவு வேண்டும்.
3. திருமணத்துக்கு பின்பு வேலைக்கு செல்வது பற்றி பெண்ணும், தன் சம்பளத்தில் இருந்து பெற்றோர்களுக்கு செலவிடுவது பற்றி இருவருமே திருமணத்துக்கு முன்னரே கலந்தாலோசிப்பது நல்லது.
4. அன்றாட வாழ்வில் நாம் நம்மைச்சுற்றி சந்திக்கக்கூடிய மணமுறிவு, குடும்ப சிக்கல்கள் போன்ற எதிர்மறை நிகழ்வுடன் உங்கள் எதிர்காலத்தை இணைத்து பார்ப்பதை தவிருங்கள்.
5. தங்களின் எதிர்கால திட்டம், குழந்தைப்பேறு, உண்மையான குணாதிசயம் போன்றவற்றை ஆரம்பத்திலேயே இருவரும் பேசிக்கொள்வது சரியாக இருக்கலாம். ஏனெனில் நீண்ட நாள் கழித்து தெரியவரும்பட்சத்தில் இருவருக்கிடையே பிரச்னைக்கு வழிவகுக்கும். இதனை கையாள ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் உதவும்.
6. இளம்வயதினர் மத்தியில் திருமணம் தேவையா என்ற எண்ணம் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. இதை சமூகரீதியாக அணுகாமல் தனிப்பட்ட முறையில் யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் திருமணம் என்பது சமூகம், பொருளாதாரம், உடல், உணர்ச்சி, உளவியல் போன்ற காரணிகளை உள்ளடக்கியது. அனைத்து காரணிகளையும் சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது.
7. ஆடம்பரம், போலி கெளரவம் போன்றவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, காதல், நட்பு, நன்றி உணர்வு, கருத்து சுதந்திரம், வேலைப்பகிர்வில் அக்கறை காட்டுவது திருமண வாழ்க்கை சீராக செல்ல உதவும்.
8. ஆரோக்கியமான இல்லறத்தின் தொடக்கம் பரஸ்பர புரிதலில் இருந்துதான் தொடங்குகிறது. மனம் விட்டு பேசுவதும், காது கொடுத்து கேட்பதுமே புரிதலின் தொடக்கம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
9. சமூக வலைதளங்களிலும் சினிமாவிலும் காட்டப்படும் திருமண வாழ்க்கை நடைமுறையில் ஒத்துவராது என்கிற யதார்த்தம் தெரிவது அவசியமோ அவசியம்.
10. ஒரு திருமண பந்தத்தில் தியாகம், விட்டுக்கொடுத்தல், பொறுத்துபோதல் போன்றவை தொடர்ந்து ஒருநபர் சார்ந்தே இருக்கக்கூடாது. இருவருமே அவற்றை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், அது toxic relationship ஆக கூட எதிர்காலத்தில் மாறலாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY