`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல; தவறான கணிப்பில் இப்படி...' - சர்ச்சை சம்பவம் குறித்த...
CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் - இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!
ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக ஸ்கைபேக்ஸ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணிக்கான அறிவிப்பை விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ஜெயின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் இருவரின் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது விளையாட்டுத் துறையில் ஸ்கைபேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் இந்திய கலாசாரத்தோடு நெருக்கமாக இணைந்திருப்பதை கருத்தில் கொண்டு, இளைஞர்களைச் சென்றடையும் முயற்சியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது என்று ஸ்கைபேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிஎஸ்கே நிர்வாகத்தின் தரப்பில், இந்த ஒப்பந்தம் ரசிகர்கள் மற்றும் அணிக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 மார்ச் 26 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த பிராண்ட் கூட்டணி ரசிகர்களிடம் கூடுதல் கவனம் ஈர்க்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஐபிஎல் ஒரு விளையாட்டு தொடராக மட்டுமல்ல, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. அந்த திருவிழா சூழலில், சிஎஸ்கே அணியுடன் ஸ்கைபேக்ஸ் இணைந்திருப்பது அதன் பிராண்டுக்கும் விற்பனைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















