செய்திகள் :

Ditwah: தமிழகம் நோக்கி டிட்வா புயல்; எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

post image

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நாளை (நவம்பர் 29) தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யலாம்.

புயல் - சித்தரிப்புப் படம்|Ditwah Cyclone
'டிட்வா' புயல் - சித்தரிப்புப் படம்

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.

அதேபோல், நாளை மறுநாள் (நவம்பர் 30) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.

மேலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகம் நோக்கி நகரும் டிட்வா புயல் நாளை மறுநாள் தமிழ்நாடு கடல் பகுதிகளுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டிட்வா புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கனமழை
கனமழை

அந்த அறிவிப்பில், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், புதுச்சேரியிலும் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு மத்தியில் தமிழக பள்ளி கல்வித்துறை, மாநிலம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் தமிழக அரசு அதனை மறுத்திருக்கிறது.

விருதுநகர்: SIR பணியில் மாணவர்களைப் பயன்படுத்துவதா? - கொதிக்கும் ஆசிரியர்கள்!

இந்தியத் தேர்தல் ஆணையமானது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாகக் கணக்கீட்டுப் ப... மேலும் பார்க்க

நெல்லை: பிரமாண்டமாக உருவான `பொருநை' அருங்காட்சியகம் - இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்! | Photo album

நெல்லை: பிரமாண்டமாக உருவான 'பொருநை' அருங்காட்சியகம் - இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்.! மேலும் பார்க்க

தொழிலாளர் நலச் சட்டத்தில் அதிரடி மாற்றங்கள்... மாற்றமா... தடுமாற்றமா?

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பார்கள். காலத்துக்கேற்ப சட்டங்களும் மாற்றப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில், 1950,-60-களில் நடைமுறைப்படுத்தப்பட்ட 29 தொழிலாளர் நலச் சட்டங்களை, இன்றைய காலத்துக்கு ஏற்ற வகைய... மேலும் பார்க்க

SIR: ``இது மனித உரிமை மீறல்" - RSS அமைப்பின் ஆசிரியர்கள் பிரிவு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

இந்தியாவில் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) நடைபெறும் மாநிலங்களில் இந்த விவகாரம்தான் பேசுபொருளாக இருக்கிறது. குறிப்பாக SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் வேலைப் பளூ, அதிகாரிகளின் மிரட்டல் எனப்... மேலும் பார்க்க

"தவெக வந்தவுடன் அண்ணன் செங்கோட்டையன் சொன்ன தேர்தல் வியூகம் இதுதான்" - ஆதவ் அர்ஜுனா

இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார்.கடந்த சில தினங்களாக செங்கோட்டையன் விஜய்யுடன் இணையப்போவதாக பரபரப்பான விவாதங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று ... மேலும் பார்க்க

ஆசிரியை வெட்டிக் கொலை: ``முதல்வர் ஸ்டாலின் மாய உலகில் இருக்கிறார்" - சாடும் அன்புமணி

தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை காவியா சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பா.ம.க.தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``தஞ்சாவூர் மா... மேலும் பார்க்க