செய்திகள் :

Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?

post image

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களாக கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் போட்டும் பலன் இல்லை. இந்நிலையில், தலையணை வைத்துப் படுப்பதுதான் கழுத்துவலிக்குக் காரணம் என்றும், அதைத் தவிர்த்துவிட்டு வெறுமனே படுக்கும்படியும் சொல்கிறார் என் நண்பர். இது உண்மையா, தலையணையைத் தவிர்த்தால் கழுத்துவலி சரியாகிவிடுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல்  சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.

எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு
எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு

கழுத்து வலி என்றதுமே, தலையணை வைக்காமல்  படுத்தால் சரியாகிவிடும் என்கிற கருத்து பலரிடமும் உள்ளது.  தலையணை இல்லாமல் படுத்தால் உங்களுக்கு வலி சரியாகிறது என்றால் படுக்கலாம். ஆனால்,  கழுத்துவலி உள்ள எல்லோருக்கும் இது  தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது.

பல நாள்களாக கழுத்துவலி தொடர்வதாகச் சொல்லும் நீங்கள், அதற்கான மருத்துவரைப் பார்த்து காரணம் கேட்டீர்களா, சிகிச்சையை எடுத்தீர்களா என்று தெரியவில்லை. காரணம் தெரிந்து சரியான சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. நீங்களாகவே பெயின் கில்லர் வாங்கிப் பயன்படுத்துவது சரியல்ல.


நீங்கள் பயன்படுத்தும் தலையணை கடினமாக இல்லாமல் மென்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் இலவம்பஞ்சு தலையணை  மிகவும் ஏற்றது. ஃபோம்  (Foam) தலையணைகளும் உபயோகிக்கலாம்.  குறிப்பாக, மெமரி ஃபோம்  (Memory Foam)  தலையணைகளை வைத்துப் படுத்துக்கொள்ளலாம்.  

மெமரி ஃபோம் வகைத் தலையணை
மெமரி ஃபோம் வகைத் தலையணை

மெமரி ஃபோம் வகைத் தலையணையில் தலை வைத்துப் படுக்கும்போது ஃபோம் அமுங்கும்.  அதிலிருந்து தலையை எடுத்ததும், மீண்டும்  தலையணை பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

சாதாரண ஃபோம் தலையணையைப் பயன்படுத்தும்போது  நாளாக, ஆக,  அது பழைய நிலைக்குத் திரும்பாது. கழுத்து வலி உள்ளவர்களுக்கு இந்த வகை தலையணையோ, மெத்தையோ ஏற்றவை அல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

``500+ மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் செய்துள்ளோம்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் நலன் குறித்த கவலைகள் இன்று அதிகரித்தவண்ணம் உள்ளன. 'வரும் முன் காப்போம்' என்பதற்கேற்ப முறையான விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ந... மேலும் பார்க்க

Doctor Vikatan: ``குழந்தையின் அப்பா யார்?'' - DNA டெஸ்ட் உறுதிசெய்யுமா? எப்படி செய்யப்படுகிறது?

Doctor Vikatan: திருமணம் தாண்டிய உறவுகளிலும், திருமணமாகியிருந்தநிலையிலும்கூட, இருவருக்குப் பிறக்கும் குழந்தையை தனதல்ல எனஅந்த ஆண்மறுக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்க்கிறோம். அப்போதெல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதிக ரத்த அழுத்தம்தானே ஆபத்து, ரத்த அழுத்தம் குறைந்தாலும் பிரச்னையா?

Doctor Vikatan: பொதுவாக ஒருவருக்கு பிபி எனப்படும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைத்தானே ஆபத்தான அறிகுறியாகச் சொல்வோம்.ஆனால், சிலர், குறைந்த ரத்தஅழுத்தமும் பிரச்னைக்குரியது என்கிறார்களே. அது உண்மையா?பதி... மேலும் பார்க்க

மைக்ரேன் கஷாயம், சைனசைடிஸ் லேகியம், இருமலுக்கான பசும்பால் - மரு. சிவராமன் சொல்லும் தீர்வு!

தலைவலி என்றாலே அது தாங்க முடியாததுதானே... பலரையும் பாதிக்கிற இதற்கு சில சித்த மருத்துவ தீர்வுகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..!இது மைக்ரேன் கஷாயம்! ’த... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலைச்சுற்றல் பிரச்னை, ஏன் இ.என்.டி மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு கடந்த ஒரு வருடமாக தலைச்சுற்றல் பிரச்னை இருக்கிறது. மருத்துவரை அணுகியபோது , இது வெர்டிகோ பாதிப்பாக இருக்கலாம் என்றும்இ.என்.டி மருத்துவரைப் பார்க்கும்படியும் சொன்னார். தல... மேலும் பார்க்க

Non Veg: வாரத்துக்கு எத்தனை முறை சாப்பிடலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம்

'அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா?' விளக்கமளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன். Non Vegஅசைவ உணவுகள் நல்லவையா?"அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்க... மேலும் பார்க்க