செய்திகள் :

Doctor Vikatan: குப்புறப் படுத்துத் தூங்கினால் முதுகுவலி வரும் என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: என் வயது 45. நான் பல வருடங்களாகக் குப்புறப் படுத்துத் தூங்கியே பழகியவன். சமீபகாலமாக எனக்கு முதுகுவலி இருக்கிறது. படுக்கும் பொசிஷன் சரியில்லை என்றால் முதுகுவலி வரும் என்கிறான் என் நண்பன்.

குப்புறப்படுத்தால் முதுகுவலி வருமா.... மல்லாந்த நிலை, ஒருக்களித்த நிலை, குப்புறப் படுப்பது... எந்தப் பொசிஷனில் தூங்குவது சரியானது?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்
புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

மக்களில் சுமார் 10 சதவிகிதத்தினர் மல்லாந்த நிலையிலேயே படுத்துத் தூங்குகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இப்படித் தூங்கும்போது முதுகெலும்புக்கும் நல்ல ரெஸ்ட் கிடைக்கிறது.

சுமார் 60 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும், சுமார் 16 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. ஒருக்களித்துத் தூங்கும்போது உங்கள் சுவாசம் சீராக இருக்கும் என்பதால் இது ஓர் ஆரோக்கியமான தூங்கும் முறையாகச் சொல்லப்படுகிறது.

ஒருக்களித்துத் தூங்குபவர்கள், தோள்கள் மற்றும் இடுப்புப் பகுதிக்குச் சரியான அழுத்தம் தரும் மென்மையான மெத்தையைத் தேர்வு செய்ய வேண்டும். 

தூங்கும் முறை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நல்ல தலையணை உபயோகிப்பதும் முக்கியம். ரொம்பவும் தடிமனாக இல்லாமல் நடுத்தரமான, போதுமான உயரத்தில் தலையணையைத் தேர்ந்தெடுங்கள்.

மெத்தையானது, உங்கள் முதுகுத்தண்டின் இயற்கையான வளைவை உறுத்தாதபடி, மிகவும் கடினமாக இல்லாததாகப் பார்த்துக் கொள்ளுங்கள். 'மெமரி ஃபோம்' (Memory foam) மற்றும் ஹைபிரிட் மெத்தை (Hybrid bed) வகைகள் சிறப்பாக இருக்கும்.

ரொம்பவும் தடிமனாக இல்லாமல் நடுத்தரமான, போதுமான உயரத்தில் தலையணையைத் தேர்ந்தெடுங்கள்.

குப்புறப்படுத்துத் தூங்குவது கழுத்துக்கு நல்லதில்லை.  பலகாலமாகப் குப்புறப்படுத்தே தூங்கிப் பழகியவர்கள், மிக மெல்லிய தலையணையைப் பயன்படுத்த வேண்டும். தலையணை இல்லாமல் தூங்குவது அதைவிடவும் சிறப்பு. 

குப்புறப்படுத்துத் தூங்குகிறவர்களுக்கு முதுகுவலி வரும் வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் உறங்குபவர்களுக்கு முதுகெலும்பு தொய்வடையாமல் தடுக்க உறுதியான மெத்தை தேவைப்படும். 'இன்னர் ஸ்பிரிங் ஃபோம்' (Inner spring  foam) வகை மெத்தையைப் பயன்படுத்த வேண்டும். 

ஆனால், உங்கள் முதுகுவலிக்குக் குப்புறப்படுத்துத் தூங்குவதுதான் காரணம் என நீங்களாக நினைத்துக்கொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். வலிக்கு வேறு காரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கேற்ப சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: அதிகப்படியான bleeding... பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடனே நிற்குமா?

Doctor Vikatan: பொட்டுக்கடலை சாப்பிட்டால் அதீத ரத்தப்போக்கு (excessive bleeding) கட்டுப்படுமா... அதிகப்படியான ப்ளீடிங்கை குறைக்க இயற்கை வழிகள் சொல்லவும்.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இளவயதில் அடிக்கடி ஸ்ட்ரெஸ்; பிற்காலத்தில் மறதிக்கு வழிவகுக்குமா?

Doctor Vikatan: இன்று வாழ்க்கையில் யாருக்குமேஸ்ட்ரெஸ் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகஇருக்கிறது. 50 வயதுக்கு முன் அடிக்கடி ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களுக்கு, பிற்காலத்தில் மறதி, மூளையின் செயல்திறன் கு... மேலும் பார்க்க

இளம்பெண்களிடையே டிரெண்ட் ஆகும் 'Gel Nails'; பயன்படுத்தலாமா? சூப்பர் டிப்ஸ் இதோ!

ஃபேஷன் மற்றும் அழகு காரணங்களுக்காக இளம்பெண்களிடையே சமீபத்தில் டிரெண்டு ஆகி வருகிறது, 'ஜெல் நகங்கள்'. இந்த ஜெல் நகங்களைப் பயன்படுத்தலாமா... கூடாதா என்பதை விளக்குகிறார் சரும நோய் மற்றும் அழகுக்கலை நிபுண... மேலும் பார்க்க

Workout செய்ய நினைச்சாலே ஸ்ட்ரெஸ் ஆகுதா? இருக்கவே இருக்கு சிம்பிள் டெக்னிக்ஸ்!

பலருக்கும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆர்வம் அதை செயல்படுத்துவதில் காணாமல் போய்விடும். இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நிறைந்து வழியும் ஜிம... மேலும் பார்க்க

Doctor Vikatan: Flax Seeds எனப்படும் ஆளி விதை; அப்படியே சாப்பிடுவது சரியானதா?

Doctor Vikatan: என்னுடைய தோழி ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளைப்பொடித்துவைத்துக்கொண்டு தினமும் சமையலில் சேர்ப்பதாகச்சொல்கிறாள்.ஆனால், ஆளி விதைகளைஅப்படியே சாப்பிடுவதாகநிறைய பேர் சொல்லிக் கேட்டிரு... மேலும் பார்க்க

'உங்கள் உடல் steady-ஆக இருக்கிறதா?' தெரிந்துகொள்ள ஒற்றைக்காலில் நில்லுங்கள்! |#Flamingo balance test

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக டிரெண்டாகி வருகிறது 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' (Flamingo balance test).வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு ஒற்றைக்காலில் நின்றிருப்பீர்கள், வென்றிருப்பீர்கள். உங்... மேலும் பார்க்க