செய்திகள் :

Doctor Vikatan: செக்கு எண்ணெய் வாங்க வசதியில்லை; ரேஷன் பாமாயில் பயன்படுத்தினால் இதயநோய் வருமா?

post image

Doctor Vikatan: நான் ஓர் இல்லத்தரசி. ரேஷன் கடையில் தரும் பாமாயில் மற்றும் ரீஃபைண்ட் எண்ணெய்களைப் பயன்படுத்தி சமைத்து வருகிறேன். செக்கு எண்ணெய் வாங்க வசதி இல்லை. இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இன்று பரவலாகப் பலரும் செக்கு எண்ணெய் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். விலை சற்று அதிகம் என்பதால் அதைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற உங்களது கவலை புரிகிறது. ஆனால், இது குறித்து நீங்கள் ரொம்பவும் கவலைப்பட வேண்டியதில்லை. 

நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகளில்) வழங்கப்படும் பாமாயில் (Palm Oil) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined Oil) ஆகியவற்றைத்தான் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாமாயிலில் சாச்சுரேட்டடு ஃபேட் (Saturated Fat) சற்றே அதிகமாக உள்ளது. எனவே, இதை அதிக அளவில், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL Cholesterol) அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மிக அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்படுவதால், அவற்றில் உள்ள பல நல்ல பண்புகளும், ஊட்டச்சத்துகளும் அழிந்துவிடுகின்றன.

நீங்கள் எந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைவிட, எவ்வளவு எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம். எந்த எண்ணெயாக இருந்தாலும் அதன் அளவு கட்டுப்படுத்தப் பட வேண்டும். சமைக்கும் போது எண்ணெயை அப்படியே பாத்திரத்தில் ஊற்றுதையும், பெரிய கரண்டிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் பயன்பாட்டின் அளவைக் குறைக்க ஸ்பிரே (Spray)  பாட்டில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிறிய அளவிலான ஸ்பூன்களையும் பயன்படுத்துங்கள்.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. எண்ணெய் மீதமாகிவிட்டதே, வீணாகிறதே... என்று நினைத்து, அதனைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால், அதில்  'டிரான்ஸ் ஃபேட்ஸ்' (Trans Fats) உருவாகும். இது உங்களது உடலுக்கு மேலும் அதிக கெடுதலை விளைவிக்கும். 

சமைக்கும் போது எண்ணெயை அப்படியே பாத்திரத்தில் ஊற்றுதையும், பெரிய கரண்டிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

முடிந்தால் சமையல் முறையை ஆரோக்கியமாக மாற்றுங்கள்.  உணவுகளை எண்ணெயில் பொரிப்பதையோ (Deep Fry) அல்லது அதிக எண்ணெய் ஊற்றி வதக்குவதையோ (Heavy Saute) தவிர்த்து விடுங்கள்.

அதற்கு பதிலாக, ஆவியில் வேகவைப்பது (Steaming), அவிப்பது (Boiling), பிரஷர் குக்கிங் (Pressure Cooking) போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்றுங்கள். 

உணவில் நார்ச்சத்தை அதிகரியுங்கள். அதற்கு உங்களது அன்றாட உணவில் அதிக அளவிலான காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ரேஷன் கடையில் கிடைக்கும் பாமாயிலைப் பயன்படுத்துவதால் கட்டாயமாக இதய நோய் (Heart Disease) வந்துவிடும் என்று அர்த்தமல்ல. நாம் எந்த எண்ணெயை எப்படி, எந்த அளவில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். எனவே, அளவறிந்து கவனமாகப் பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: 2 வாரங்கள் வாக்கிங்கை மிஸ் செய்தாலே சர்க்கரை நோய் வந்துவிடுமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் உள்ளது. ப்ரீ டயாபட்டிக் நிலையில் உள்ளவர்கள் வெறும் இரு வார ஓய்வு எடுத்தாலே, அதாவது நடைப்பயிற்சி செய்யாமலே அது முழு அளவிலானசர்க்கரை நோயாக மாறிவிடும் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது குதிகாலில் வலி... யூரிக் ஆசிட் பிரச்னையா?

Doctor Vikatan:என் வயது 50. கடந்த ஒரு வருடமாக காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது கணுக்காலில் (Heel pain) ஊசி குத்துவது போல் வலிக்கிறது. கொஞ்சம் தூரம் நடந்த பிறகு வலி குறைந்துவிடுகிறது. இது ... மேலும் பார்க்க

கோவிட்: 2.21 கோடி மரணங்கள்; அம்பலமான தரவு குளறுபடிகள்... WHO அறிக்கையின் பின்னணி!

கோவிட்-19 பெருந்தொற்று ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் தந்த துயரங்களையும், நாம் இழந்த உயிர்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? உலக சுகாதார அமைப்பின் (WHO) 'உலக சுகாதார புள்ளிவிவரங்கள் 2026' அறிக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தை பெற்ற, வயதான பெண்களுக்குத் தொப்பையைத் தவிர்க்கவே முடியாதா?

Doctor Vikatan: பெரும்பாலான பெண்கள் திருமணமாகி, குழந்தை பெறும்வரை தொப்பை இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு குழந்தை பெற்றதும் பலருக்கும் தொப்பை வருகிறது. இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தொப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்குமஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சில... மேலும் பார்க்க

Doctor Vikatan: சட்டென்று மாறும் வானிலை... உடனே உடல்நலம் பாதிக்கப்படுவது ஏன்?

Doctor Vikatan:இப்போதெல்லாம் கோடையில் மழை பெய்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இப்படி திடீர், திடீரென வானிலை மாறும்போது, சிலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது ஏன்... உண்மையிலேய... மேலும் பார்க்க