செய்திகள் :

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல்.... ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா?

post image

Doctor Vikatan: வீட்டில் ஒருவருக்கு நிமோனியா (Pneumonia) காய்ச்சல்  வந்தால் அது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுமா...  பரவாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா.

 நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா.
நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா.

வீட்டில் ஒருவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அது நிச்சயம் பரவும். இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பாக்டீரியாவும் சரி, வைரஸ்களும் எளிதில் பரவக்கூடியவை (highly contagious).

பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ, அவர்களுடைய சுவாசத் துளிகள் (respiratory droplets) காற்றில் பரவுகின்றன. அதன் மூலம் அந்தக் கிருமிகளும் காற்றில் பரவுகின்றன. அதனால், அது எளிதாக மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் பரவக்கூடும். 

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கப்புகள் (cups), பாத்திரங்கள் (utensils) அல்லது அவர்கள் பயன்படுத்தும் டிஷ்யூ (tissues) மூலமாகவும் இந்தத் தொற்றுகள் (infections) பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நிமோனியா காய்ச்சல் என்றில்லை, எந்த வகையான வைரஸ் தொற்றோ (viral infection), பாக்டீரியா தொற்றோ வந்திருப்பவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் அவர்களுடைய மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். 

தும்மும்போதும் இருமும்போதும் அவர்களுடைய மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

கைகுட்டை (handkerchief) பயன்படுத்துவதும் அல்லது குறைந்தது கையை வைத்து மறைப்பதும், உடனே கையைக் கழுவுவதும்  முக்கியம். நோய்வாய்ப்பட்டிருக்கும் காலங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது (social distancing) ரொம்பவே முக்கியம். 

அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது, குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தனிமைப்படுத்திக் கொள்வதும் நல்லதுதான். அந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், தட்டுகள், உடைகள் போன்றவற்றையுமே தனியே வைத்திருப்பதும் முறைப்படி சுத்தப்படுத்துவதும் மிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

கர்ப்பம் டு குழந்தை பிறப்பு: உதவும் தமிழக அரசின் 'சஞ்சீவி மகப்பேறு பெட்டகம்' - முழு விவரம்!

கர்ப்பம் - ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல், மனம், ஹார்மோன், வளர்சிதை மாற்றம் என பல மாற்றங்கள் நிகழும் காலம். இந்தக் காலத்தில் தாயின் ஆரோக்கியமும், கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் உறுதியாக இருக்... மேலும் பார்க்க

'ராகி கூழ், கம்பு கூழ்... செய்த 1-3 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டுமா?'- டாக்டரின் அட்வைஸ் என்ன?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும், இன்னும் வெயிலும், வெப்பமும் நீங்கவில்லை. தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் சீசனையும், கூழையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கூழ் எப்படிக் குடிப்பது நல்லது... எப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: விபத்தில் துண்டான விரல்... மீண்டும் ஒட்டவைக்க முடியுமா?

Doctor Vikatan: சமீபத்தில் நான் சாலையில் கண்ட காட்சி இது. இரண்டு டூ வீலர்கள் மோதிக் கொண்டவிபத்தில் ஒருவரது விரல் துண்டாகிவிட்டது. அந்தத் துண்டான விரலை மீண்டும் தைத்து ஒட்ட வைக்க முடியுமா... அதை எப்படி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயது மகனுக்கு தேர்வு நெருங்கினால் வயிற்றுப்போக்கு... தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 10 வயதாகிறது. பள்ளிக்கூடத்தில் தேர்வு நெருங்கினாலே அவனுக்கு வயிற்றுப்போக்குஆரம்பித்து விடுகிறது. பயத்தினால் இப்படி ஆகுமா... இதற்கு என்ன செய்வது, தானாகச் சரியாகுமா?பதில் சொ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் தெரியும் புள்ளி.... பூச்சி பறக்கும் உணர்வு... பார்வை பாதிக்குமா?

Doctor Vikatan:எனக்குக் கடந்த சில மாதங்களாக கண்ணில் கறுப்புப் புள்ளிகள் அல்லது பூச்சிகள் பறப்பது போல் தெரிகிறது. இது அவ்வப்போது தோன்றுகிறது... பிறகு தானாக மறைகிறது. இந்தப் பிரச்னையயால் கண் பார்வைபாதிக... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி ஏற்படும் விக்கல்... மரணத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:எனக்கு அடிக்கடி விக்கல் எடுக்கிறது. தண்ணீர் குடித்தாலும் நிற்பதில்லை. சில சமயங்களில் 2 நாள்களுக்குக்கூட தொடர்கிறது. இது போன்று அடிக்கடி ஏற்படும் விக்கல் மரணத்தை ஏற்படுத்துமா?பதில் சொல்க... மேலும் பார்க்க