செய்திகள் :

Doctor Vikatan: பல்லைப் பிடுங்கிய இடத்தில் இடைவெளி விட்டால் மற்ற பற்கள் நகருமா?

post image

Doctor Vikatan: பற்களை வெண்மையாக்கும் 'டீத் வொயிட்டனிங்' (Teeth whitening) சிகிச்சை பாதுகாப்பானதா... மஞ்சள் நிறப் பற்கள் ஆரோக்கியமற்றவையா? ஒரு பல்லைப் பிடுங்கினால், அடுத்தடுத்த பற்கள் நகரும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஜியோநாத் இமானுவேல்

பல் மருத்துவர் ஜியோநாத் இமானுவேல்
பல் மருத்துவர் ஜியோநாத் இமானுவேல்

படங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பலரும் வெள்ளை நிற பளிச் பற்களுக்கு ஆசைப்படுகிறார்கள். அதுதான் ஆரோக்கியமானது என்றும் நினைக்கிறார்கள்.

உண்மையில், ஆரோக்கியமான பற்கள் இயற்கையிலேயே தூய வெள்ளை நிறத்தில் இருக்காது, அவை ஆஃப்-ஒயிட் (Off-white) அல்லது லேசான மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். குறிப்பாக இந்திய மக்களிடையே இப்படி இருப்பது மிகவும் சகஜம்.

பல்லின் உட்புற அடுக்கான 'டென்டின்' (Dentin) மஞ்சள் நிறத்தில் இருக்கும், அது ஒளி ஊடுருவக்கூடிய தெளிவான எனாமலின் வழியாக வெளியே தெரிகிறது. பல் மருத்துவரின் மேற்பார்வையில் எப்போதாவது ஒருமுறை பற்களை வெண்மையாக்கும் சிகிச்சையை மேற்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. ஆனால், வீட்டிலேயே பற்களை வெண்மையாக்கும் முறைகள் (Home whitening systems) நிச்சயமாகப் பாதுகாப்பானதல்ல.

பற்களை அளவுக்கு அதிகமாக வெண்மையாக்குவது பற்களில் கடுமையான கூச்சத்தை (Sensitivity) ஏற்படுத்தும், மேலும், உங்கள் பற்களில் உள்ள தாதுக்களையும் தற்காலிகமாக நீக்கிவிடும்.

மேலே உள்ள பல், கடித்து மெல்லுவதற்கு எதிராக எந்தப் பல்லும் இல்லாததால் கீழ்நோக்கி நீளமாக வளரத் தொடங்கும்.

பல்லை எடுத்த இடத்தில் இடைவெளி விட்டால், மற்ற பற்கள் 100% நகரும். பற்கள் எப்போதுமே கூட்டாக இணைந்து செயல்படுவதையே விரும்புகின்றன. பல் எடுத்த இடத்தை நீங்கள் அப்படியே இடைவெளியுடன் விட்டுவிட்டால், அதற்கு அருகில் உள்ள பற்கள் அந்த இடைவெளியை நோக்கிச் சரியவும் நகரவும் தொடங்கும்.

அதைவிட மோசமாக, அந்த இடைவெளிக்கு நேர் எதிராக அல்லது மேலே உள்ள பல், கடித்து மெல்லுவதற்கு எதிராக எந்தப் பல்லும் இல்லாததால் கீழ்நோக்கி நீளமாக வளரத் தொடங்கும். இதை நாங்கள் 'சுப்ரா இரப்ஷன்' (Supra eruption) என்று அழைக்கிறோம்.

இது நீங்கள் கடித்து மெல்லும் தன்மையைப் பாதிக்கும், தாடைகளைச் சேதப்படுத்தும். மேலும், எதிர்காலத்தில் மற்ற பற்களிலும் சொத்தை விழுவதற்கான தொடர் விளைவை (Domino effect) ஏற்படுத்தும். எனவே, இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் ஆப்ஷன் குறித்து உங்கள் பல் மருத்துவரிடம்  பேசி முடிவெடுக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: எந்த க்ரீமும் ஹெல்ப் பண்ணலையா... உங்க ஸ்கின் இன்ஸ்டன்ட்டா Glow ஆகணுமா?

Doctor Vikatan: என் வயது 40. மாநிறமாக இருப்பேன். நான் மாதம் தவறாமல் ஃபேஷியல் செய்துகொள்வேன். காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ்தான் உபயோகிக்கிறேன். என்ன செய்தும் என் சருமத்தில் மாற்றம் தெரியவில்லை. சருமத்தை இ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காரணமே இல்லாம திடீர்னு உடல் எடை குறையுதா... இதையெல்லாம் கவனிச்சீங்களா?

Doctor Vikatan: என் வயது 43. எனக்குக் கடந்த சில மாதங்களாக உடல் எடை மெள்ள மெள்ள குறைந்து வருகிறது. எடையைக் குறைப்பதற்காக நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இப்படி திடீரென உடல் எடை குறைய என்ன காரணம்.... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருமணி நேரத்துக்கொருமுறை சிறுநீர்... உடனே வெளியேறாத சிறுநீர், தீர்வென்ன?

Doctor Vikatan:எனக்கு வயது 26. எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. குறிப்பாக, பயணம் செய்யும்போது இந்த உணர்வு அதிகமாக இருக்கிறது. ஆனால், தற்போது சில நாள்களாக வீட்டில் இருக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலையில் கைவைத்தாலே கொத்துக்கொத்தா முடி கொட்டுதா... உடனே நிறுத்த 10 டிப்ஸ்!

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த ஒரு மாதமாக எக்கச்சக்கமாக முடி உதிர்கிறது. எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை மாற்றிப் பார்த்தும் முடி உதிர்வது நிற்கவில்லை. முடி உதிர்வை ஒரே வாரத்தில் நிறுத்தலாம் என்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தோள்பட்டை வலி, ஜூனியர் NTR செய்துகொண்ட ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சை: என்ன ஸ்பெஷல்?

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வலி நிவாரணிகள், பிசியோதெரபி எல்லாம் செய்து பார்த்தும் வலி குறைந்தபாடில்லை. கடைசியாக சந்தித்த மருத்துவர், எனக்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் ப... மேலும் பார்க்க