செய்திகள் :

Doctor Vikatan: பெயின் கில்லர் இல்லாமல் பீரியட்ஸ் வலியை சமாளிக்க முடியாதா?

post image

Doctor Vikatan: என் வயது 24. பீரியட்ஸ் நாள்களில் எனக்குக் கடுமையான வயிற்றுவலி, இடுப்புவலி, முதுகுவலி ஏற்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் பெயின்கில்லர் மாத்திரைகள் போட்டுக்கொண்டுதான் சமாளிக்கிறேன். பெயின்கில்லர் எடுக்கக்கூடாது என்றே பலரும் அட்வைஸ் செய்கிறார்கள்.

பீரியட்ஸ் வலியை பெயின்கில்லர் இல்லாமல் சமாளிக்க ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி மற்றும் முதுகு வலி போன்றவை பல பெண்களுக்கும் சவாலான விஷயமாக இருக்கலாம்.

இதற்கு உடனடியாக வலி நிவாரண மாத்திரைகளை (Painkillers) நாடாமல், இயற்கையான மற்றும் எளிய முறைகளின் மூலம் வலியைக் குறைக்க முடியும்.    

ஹாட் வாட்டர் பேக் (Hot water bag) கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைக்கும். இரவில் படுக்கச் செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலுக்கு இதமான உணர்வையும், நல்ல உறக்கத்தையும் தரும்.

மாதவிடாய் நாள்களில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்றொரு பொதுக்கருத்து உள்ளது. ஆனால், அதை அப்படியே பின்பற்றாமல், அவரவர் உடல் ஒத்துழைத்தால் தாராளமாக வொர்க் அவுட்செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும்போது சுரக்கும் எண்டார்ஃபின் (Endorphin) ஹார்மோன் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. அதேபோல சிலவகை யோகாசனங்களும் ( (Cat-Cow pose, Child’s pose) பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் வலியைக் குறைக்கும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep breathing) செய்வதன் மூலம் மன அழுத்தமும் வலியும் குறையும்.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி (Deep breathing) செய்வதன் மூலம் மன அழுத்தமும் வலியும் குறையும்.
ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி (Deep breathing) செய்வதன் மூலம் மன அழுத்தமும் வலியும் குறையும்.

பீரியட்ஸ் வலியைக் குறைப்பதில் உணவுகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. மெக்னீசியம் சத்து அதிகம் உள்ள வாழைப்பழம், கீரை, நட்ஸ், டோஃபு போன்றவற்றைச் சாப்பிடலாம். ஒரு துண்டு டார்க் சாக்லேட் மற்றும் சூடான சூப் குடிப்பது இதமாக இருக்கும். 

அதிகப்படியான கஃபைன் (Caffeine), ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் சீஸ் (Cheese) போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. போதுமான அளவு ஓய்வும் ஆழ்ந்த உறக்கமும் உடலைத் தளர்த்தி, வலியைக் குறைக்கும்.

அன்றாட வேலைகளைச் செய்யவே முடியாத அளவுக்கு வலித்தாலோ, மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வலி ஆரம்பித்தாலோ, ஃபைப்ராய்டு (Fibroids) எனப்படும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிந்தாலோ, சுய வைத்தியங்களைச் செய்துகொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகமிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: வெளியே தொங்கும் காப்பர் டி நூல்... ஆபத்தா, அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan:நான் 2 வருடங்களுக்கு முன்பு காப்பர் டி பொருத்திக்கொண்டேன். கடந்த சில மாதங்களாக அதன் நூல் வெளியே வந்தது போல உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு உண்டா... இதை எப்படி சரிசெய்ய வேண்டும்? அகற்றிவிட்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: நுரையீரலில் கோக்கும் சளியை உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட முடியுமா?

Doctor Vikatan: என்நணபனுக்கு60 வயதாகிறது. அவனுக்குஎப்போதும் சளி பிரச்னை இருக்கிறது. சளியை அகற்ற மாத்திரைகள் எடுத்தும்குணமாகவில்லை. இந்நிலையில், சளியை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை இருப்பதாகவும் அதைச்செய்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதய நோயாளிகள்... ஒருவேளையோ, ஒரு நாளோ மருந்துகளைத் தவறவிடுவது ஆபத்தாகுமா?!

Doctor Vikatan: இதயநோயாளிகளுக்குகொடுக்கப்படும் மருந்துகளை ஒருநாள்கூடதவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டுமா... மறதியின் காரணமாக அல்லது வேறு காரணங்களால் ஒருநாள், இரண்டு நாள்கள்மாத்திரைகளைத்தவறவிட்டால் ஆபத்தா?ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் அசைவம் சாப்பிடக் கூடாதா?

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில்அசைவ உணவுகளையும் சைவத்திலுமே சில உணவுகளையும் சாப்பிடக் கூடாது என்கிறார்களே... அது உண்மையா...? எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் இது போன்ற கட்... மேலும் பார்க்க

`கொலஸ்ட்ரால்-ன் அவசியமும் ஆபத்தும்... அதிமருந்தாகும் பூண்டு!' - விளக்கும் மருத்துவர்

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் நேரம் இல்லாத காரணத்தால், சீக்கிர உணவு (fast food) மற்றும் எண்ணெய், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உண்ண ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பழக்கங்கள் உடலில் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: நகம் கடிக்கும் பழக்கத்தால் வயிற்றில் பூச்சிகள் உருவாகுமா?!

Doctor Vikatan: என்குழந்தைக்கு நகம் கடிக்கிறபழக்கம் இருக்கிறது. எவ்வளவோ சொல்லியும் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. அவனுக்குஅடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. நகம் கடிக்கும் பழக்க... மேலும் பார்க்க