செய்திகள் :

Doctor Vikatan: வெயிலில் சென்றால் உடனே தலைவலி வருவது ஏன்... தவிர்க்க என்ன வழி?

post image

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்று வரும்போது ஒவ்வொரு முறையும் கடுமையான தலைவலிக்கு உள்ளாகிறேன்.

வெயில் இல்லாத நேரங்களில் இப்படி ஆவதில்லை. வெயிலுக்கும் தலைவலிக்கும் என்ன தொடர்பு...  இந்த வகை தலைவலியைத் தவிர்க்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

வெயிலில் அலைந்துவிட்டு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலுக்குள் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) காரணமாக முதலில் ரத்தம் அடர்த்தியாகும் (Concentrated blood).

இதன் விளைவாக தலைவலி ஏற்படும். வெயிலில் செல்லும்போது, சூரியனின் அதிகப்படியான வெப்பம் கண் பார்வை மூலமாக உள்வாங்கப்படும்போதும் தலைவலி வரலாம்.

வெப்பம் அதிகமாக இருக்கும்போது, மூளையின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதன் மூலமாகவும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, மிக அதிக வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருக்கும் சூழலில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலமாக வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கும் உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் (Protection mechanism) செயலிழந்து போகலாம்.

அந்த நேரத்தில், உடலின் உட்பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் (Deeper blood vessels) விரிவடைந்து, அதன் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதாலும் தலைவலி ஏற்படலாம்.

ஒற்றைத் தலைவலி  (Migraine) பிரச்னை உள்ளவர்களுக்கு, அந்தத் தலைவலியைத் தூண்டக்கூடிய காரணிகளில் (Trigger points) வெயிலும், அதிகப்படியான வெப்பமும் மிக முக்கியமாக இருக்கின்றன.

கடுமையான வெயிலில் இருந்துவிட்டு, திடீரென ஏசி அறைக்குள் நுழையும்போதோ அல்லது குளிர்ந்த நீரை அதிகம் குடிக்கும்போதோ மூளையின் ரத்தக் குழாய்கள் சட்டென்று சுருங்கி விரிவடைவதால் தலைவலி ஏற்படும்.  

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

தலைவலி வராமல் தடுக்க, தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், வெயிலில் செல்லும்போது அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிதளவாவது தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் தண்ணீருக்குப் பதிலாக இளநீர், மோர், எலுமிச்சைப்பழச் சாறு அல்லது ஓஆர்எஸ் (ORS) போன்ற எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களைக் குடிப்பது உடலின் உப்புத்தன்மையைச் சமமாக வைத்திருக்கும்.

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் குடை,  கூலிங்கிளாஸ் (Sunglasses) உபயோகிப்பது, காட்டன் ஆடைகளை அணிவது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். இவை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து ஓரளவு பாதுகாப்பு தரும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை.... வீடுகளில் சளி, காய்ச்சல் பாதிப்பு... ஏன் இப்படி?

Doctor Vikatan:வெளியில் வெப்ப அலை வீசுகிறது. வெயில் வாட்டி வதைக்கிறது. இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகம... மேலும் பார்க்க

ORS பாக்கெட்டுகளுக்காக 2 நாளாக காத்துக் கிடக்கும் மக்கள்; அலட்சியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வாட்டி வருகிறது. வெயில் ஒவ்வாமையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உடலில் நீர் இழப்பைத் தவிர்த்து உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் அதிக வியர்வை... மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்கத்தின்போது திடீரென உடல் தூக்கிப் போடுவது ஏன்... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: எனக்கு வயது 43. அடிக்கடி தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல உணர்கிறேன். அதன் காரணமாக தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதற்கு மருத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா?

Doctor Vikatan:த்ரில்லர் படக் காட்சியைப் பார்த்ததால் தனக்கு அபார்ஷன் ஆனதாக சமீபத்தில் ஒரு நடிகை தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். பொதுவாகவே த்ரில்லர் படங்கள் ஆரம்பிப்பதற்கு முன், வயதானவர்கள், குழந்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாதா?

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... அப்படி உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் என்ன பாதிப்பு வரும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்... மேலும் பார்க்க