செய்திகள் :

Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை.... வீடுகளில் சளி, காய்ச்சல் பாதிப்பு... ஏன் இப்படி?

post image

Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை வீசுகிறது. வெயில் வாட்டி வதைக்கிறது. இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. எல்லா வீடுகளிலும் யாரோ ஒருவருக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு  காய்ச்சல், சளி, இருமல் இருப்பதைப் பார்க்கிறோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு என்ன காரணம், என்ன சிகிச்சை, தடுப்பு முறை என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன்

பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன்

நீங்கள் குறிப்பிடும் பிரச்னையைத்தான் 'ஹீட் ஸ்ட்ரோக்' என்று சொல்கிறோம்.  வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதினருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிக்கலாம். இதை 'ஹீட் எக்ஸாஷன்' (heat exhaustion) என்றும் சொல்வோம். வெயிலில் வெளியே செல்கிறார்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை, நிறைய விளையாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கெல்லாம் ஹீட் எக்ஸாஷன் என்ற பிரச்னை வரலாம்.

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடங்கினால், அது தீவிரமாகாமல் தடுக்கலாம். நம் வீடுகளில் உள்ள தாத்தா, பாட்டிக்கு காய்ச்சல் அதிகமிருந்தாலோ, குழப்பமாக உணர்ந்தாலோ, சம்பந்தமே இல்லாமல் பேசினாலோ, தான் யார், எங்கே இருக்கிறோம் என்பதே தெரியவில்லை என்று சொன்னாலோ, அவையெல்லாம் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளாக இருக்கலாம். சாதாரண தொற்று என நினைத்துக்கொண்டு, வீட்டிலேயே பாராசிட்டமால் கொடுப்பதால் இந்தப் பிரச்னை சரியாகாது. அலட்சியப்படுத்தினால், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து வைத்தியம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனே அலெர்ட் ஆகி, பெரியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சரியானது.

102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனே அலெர்ட் ஆகி, பெரியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சரியானது.

ஹீட் ஸ்ட்ரோக் பாதித்த நபரை மருத்துவமனையில் அட்மிட் செய்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். எப்போதும் வரும் காய்ச்சல், சளிதானே... வழக்கமான ஆன்டிபயாட்டிக்கை கொடுத்து ஒன்றிரண்டு நாள்கள் காத்திருந்து பார்ப்போம் என நினைப்பது சரியானதல்ல. மருத்துவமனையில் சேர்த்து, சோடியம், பொட்டாசியம், யூரியா, கிரியாட்டினின் அளவுகளுக்கான டெஸ்ட் செய்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். உடல் வெப்பநிலையைக் குளிரவைக்க வேண்டியது மிக முக்கியம். தவிர, ஐவி ஃப்ளூயிட்ஸ் எனப்படும் நரம்புவழி திரவம் செலுத்துவதும் தேவைப்படும். எனவே, வெயில் காலத்தில் சளி, காய்ச்சலா... சாதாரணமாக இருக்கும் என்ற அலட்சியத்தோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

ORS பாக்கெட்டுகளுக்காக 2 நாளாக காத்துக் கிடக்கும் மக்கள்; அலட்சியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வாட்டி வருகிறது. வெயில் ஒவ்வாமையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உடலில் நீர் இழப்பைத் தவிர்த்து உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் அதிக வியர்வை... மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்கத்தின்போது திடீரென உடல் தூக்கிப் போடுவது ஏன்... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: எனக்கு வயது 43. அடிக்கடி தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல உணர்கிறேன். அதன் காரணமாக தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதற்கு மருத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா?

Doctor Vikatan:த்ரில்லர் படக் காட்சியைப் பார்த்ததால் தனக்கு அபார்ஷன் ஆனதாக சமீபத்தில் ஒரு நடிகை தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். பொதுவாகவே த்ரில்லர் படங்கள் ஆரம்பிப்பதற்கு முன், வயதானவர்கள், குழந்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாதா?

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... அப்படி உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் என்ன பாதிப்பு வரும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது என்பதற்கு விஞ்ஞானரீதியான காரணம் உண்டா?

Doctor Vikatan: பொதுவாகவே சாப்பிட்ட உடன் குளிக்கக்கூடாது என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரையாக இருக்கிறது. இது உண்மையிலேயே அறிவியல்ரீதியான அறிவுரையா அல்லது மூட நம்பிக்கையா... சாப்பிட்ட உடனே கு... மேலும் பார்க்க