செய்திகள் :

முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்! - என்னவெல்லாம் விவாதிக்கப்படலாம்? | Live Updates

post image

மாநிலங்களவைத் தேர்தல் - பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு.

தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு.

முதல் அமைச்சரவைக் கூட்டம்!

தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூன் 5-ம் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், புதிய அரசின் நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகளுக்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள், பட்ஜெட், மகளிர் உரிமைத் தொகை, மதுபான கொள்கை, மேகதாது அணை விவகாரம், மும்மொழிக் கொள்கை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கட்டுக்கட்டாகச் சிக்கிய லஞ்சப் பணம்: 3 சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட்!

தமிழ்நாட்டில் சுப முகூர்த்த நாள்களை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 டோக்கன்களும் கூடுதலாக ... மேலும் பார்க்க

குன்னுர்: CM விஜய் புகைப்பட விவகாரம்: 3 முதல்வர்களின் படங்களையும் மாட்டிய கவுன்சிலர்கள்!

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றிருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, முதலமைச்சரின் குறிப்பிட்ட புகைப்படம் ஒன்று அரசு அலுவலகங்களில் இடம்பெற வேண்டும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளத... மேலும் பார்க்க

EB ஹார்ட் டிஸ்க் விவகாரம்: ``யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது" - அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் ... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி: ``காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது" - திமுக திட்டவட்ட அறிவிப்பு!

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாட... மேலும் பார்க்க

சுகாதார சீர்கேட்டின் உச்சம்; சேலம் புதிய பேருந்து நிலைய அவலம் - கேள்விக்குறியா தனிமனித ஒழுக்கம்..?

சேலம் புதிய பேருந்து நிலையமானது, ஓமலூர் பிரதான சாலையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் நான்காவது பெரிய பேருந்து நிலையமாக இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்க... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: ``எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு..." - எம்.பி கனிமொழி காட்டம்

திருச்சி கல்மந்தை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, திருநங்கையான தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, திருநங்கையை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரி செல்வன் என்ற வாடகை கார் ஓட்டுநர்... மேலும் பார்க்க