செய்திகள் :

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கட்டுக்கட்டாகச் சிக்கிய லஞ்சப் பணம்: 3 சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட்!

post image

தமிழ்நாட்டில் சுப முகூர்த்த நாள்களை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கத் தேர்வு செய்யப்பட்ட 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை முதலே திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை (ஆலந்தூர், விருகம்பாக்கம்), மயிலாடுதுறை (கச்சேரி சாலை), விருதுநகர், சாத்தூர், கோவை (தொண்டாமுத்தூர், காந்திபுரம்), தர்மபுரி, தேனி (போடி), ராமநாதபுரம் (பரமக்குடி), விழுப்புரம், கள்ளக்குறிச்சி (மணலூர்பேட்டை), ஓசூர் (சூளகிரி), வேலூர் (வேலப்பாடி) மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் கதவுகள் பூட்டப்பட்டு பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் விக்கிரமசிங்கபுரம் உட்பட 3 இடங்களில் கூடுதல் எஸ்.பி தலைமையில் சோதனை நடத்தப்பட்டு, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் சிக்கியது.

இந்த அதிரடி சோதனையின் விளைவாக, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

அலுவலகங்களில் இருந்த அதிகாரிகளின் பணத்தை ஆய்வு செய்த போலீஸார், கணக்கில் வராத கட்டுக்கட்டான லஞ்சப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டையில் ரூ.1.20 லட்சம், மதுரை விளாங்குடியில் ரூ.90,000, திருச்சி (துறையூர், திருவெறும்பூர்) ரூ.80,000, விருதுநகரில் ரூ.54,000, சாத்தூரில் ரூ.20,000 எனப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணத்திற்கான கணக்குகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ்: `தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி' - பிரவீன் சக்ரவர்த்தியின் பதிவு வைரல்!

அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பின... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்! - என்னவெல்லாம் விவாதிக்கப்படலாம்? | Live Updates

மாநிலங்களவைத் தேர்தல் - பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிப்பு! தமிழ்நாட்டில் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு. தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ... மேலும் பார்க்க

குன்னுர்: CM விஜய் புகைப்பட விவகாரம்: 3 முதல்வர்களின் படங்களையும் மாட்டிய கவுன்சிலர்கள்!

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றிருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, முதலமைச்சரின் குறிப்பிட்ட புகைப்படம் ஒன்று அரசு அலுவலகங்களில் இடம்பெற வேண்டும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளத... மேலும் பார்க்க

EB ஹார்ட் டிஸ்க் விவகாரம்: ``யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது" - அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் ... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி: ``காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது" - திமுக திட்டவட்ட அறிவிப்பு!

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாட... மேலும் பார்க்க

சுகாதார சீர்கேட்டின் உச்சம்; சேலம் புதிய பேருந்து நிலைய அவலம் - கேள்விக்குறியா தனிமனித ஒழுக்கம்..?

சேலம் புதிய பேருந்து நிலையமானது, ஓமலூர் பிரதான சாலையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் நான்காவது பெரிய பேருந்து நிலையமாக இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்க... மேலும் பார்க்க