செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

post image

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், தங்களுக்கு எதிரான உத்தரவுகளை ரத்துசெய்யக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில்,  இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதால் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கோரப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'கார்த்திகை தீபத்தின்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்' எனக் கேள்வி எழுப்பினர்.

திருப்பரங்குன்றம் தூண்

'இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை' எனக் கூறிய நீதிபதிகள், 'அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். சட்ட நடைமுறைகளைக் காரணம் காட்டி இந்த வழக்கை தீவிரப்படுத்தாதீர்கள்'  எனக் கூறி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: ``உண்மைக்கு புறம்பான செய்தி" - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அக... மேலும் பார்க்க

Pocso சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ முகாம்! - உயர் நீதிமன்ற உத்தரவு

திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிப... மேலும் பார்க்க

`வங்கிகளில் மக்கள் பணம் வைக்கும் விதத்தில் மாற்றம் ; RBI தங்கத்தை விற்கிறதா?' - அறிக்கை சொல்வதென்ன?

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புளூம்பெர்க் ஊடகம், தனது பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தாவின் ஆய்வை மேற்கோள்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி, மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், இந்திய... மேலும் பார்க்க

அழைப்பு விடுத்த ஸ்டாலின்... திமுகவில் இணையும் விசிக பனையூர் பாபு?

'ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டாரா திருமாவளவன்?' என விஜய் அமைச்சரவைக்கு வி.சி.க சென்றதை விமர்சித்து, அக்கட்சியிலிருந்து விலகிய ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.... மேலும் பார்க்க

`இந்திய வீடுகளில் உறங்கும் 35,000 டன் தங்கம்' - மோடி சொல்லும் `மறுசுழற்சி'; மாறுகிறதா மக்கள் மனநிலை?

இந்திய வீடுகளின் லாக்கர்களிலும், பீரோக்களிலும், கோயில் கருவறைகளிலும் சுமார் 35,000 டன் தங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு கற்பனைக்கு எட்டாதது; சுமார் 3.8 டிரில்லியன் டாலர்கள்! இது நாட்டின் ... மேலும் பார்க்க

விஜய்யின் பத்திரிகையாளர் தவிர்ப்பு யுக்தி எப்படி உருவாக்கப்பட்டது? - களத்திலிருந்து ஓர் அலசல்!

முதல்வர் விஜய் அரசுமுறை பயணமாக கடந்த வாரம் டெல்லிக்கு சென்று வந்திருக்கிறார். பிரதமர் மோடியையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருக்கிறார். இந்தப் பயணத்தில் முதல்வர் பத்திரிகையாளர்களை சந்... மேலும் பார்க்க