செய்திகள் :

``அமைச்சர் ரீல்ஸ் போடுவதில் என்ன தவறு? இப்போதே விமர்சிக்கக் கூடாது" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

post image

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்க செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தேர்தலுக்கு முன்பு இருந்த கூட்டணியில் ஒரு எம்.பி சீட் கொடுத்தார்கள், தேர்தலுக்குப் பிறகு இருக்கும் கூட்டணியில் ஒரு எம்.பி சீட் கொடுக்கிறார்கள். தி.மு.க-வுடன் 2004-லிருந்து கூட்டணியில் இருந்தோம். 2014 தேர்தலை தவிர அனைத்து தேர்தலிலும் ஒன்றாக இருந்தோம்.

ஆனால் 2026 தேர்தலில் மக்கள் பெரும்பான்மை கிடைக்காத வகையில் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, நாங்களே தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் திமுக-வால் ஆட்சி அமைக்க முடியாது. அதே நேரம் இன்னொரு தேர்தல் வரக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தோம். அதற்காகதான் த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தோம்.

முதல்வர் விஜய் - பிரவீன் சக்ரவர்த்தி
முதல்வர் விஜய் - பிரவீன் சக்ரவர்த்தி

அரசியலில் இது ஒரு இயல்பான நிகழ்வுதான். அதன் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான அரசை ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறோம். காங்கிரஸ் கூட்டணி மாறியதால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு சரியாக இருந்திருக்கலாம்.

முதலீடுகளை ஈர்க்க தொழிற்துறை அமைச்சர் இன்ஸ்டாகிராம் மூலம் தொழில் முதலீட்டை ஈர்க்க ரீல்ஸ் போட்டதில் என்ன தவறு. செங்கோட்டையனை தவிர அமைச்சர்களில் யாருக்கும் முன் அனுபவம் கிடையாது. 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் முதல்முறை சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். எனவே, இந்த அரசின் செயல்பாட்டை இப்போதே விமர்சிப்பது கூடாது.

அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்
அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்

அதேப்போல இப்போது எல்லா யுக்திகளையும் பயன்படுத்த வேண்டும். அதில் தவறில்லை. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கே தன் வியாபாரம் குறித்து எக்ஸ் பக்கத்தில்தான் அறிவிக்கிறார்.

மேயர் பிரியா - எம்.எல்.ஏ பல்லவி இடையே நடந்ததெல்லாம் ஒரு பிரச்னையா? யார் குத்துவிளக்கு ஏற்றுவது போன்ற சம்பிரதாயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களுக்கான பிரச்னை குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டார்கள் என்றால் நான் மகிழ்ச்சியடைவேன். அதைவிடுத்து, இருவருக்கும் நடந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாதீர்கள்." எனத் தெரிவித்திருக்கிறார்.

`ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் தோற்றோம்' - பொதுவெளியில் போட்டுடைத்த தவெக வேட்பாளர்! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்டவர், அதியமான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்த... மேலும் பார்க்க

``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன?

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து, பின் அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியவர் அண்ணாமலை. இவர் தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை தலைமையும் ஏற்றுக்கொண்டது. ரா... மேலும் பார்க்க

`'ஆறு மாதம் சும்மா இருப்பதாகக் கூறினீர்களே' என்று முதல்வர் புலம்புகிறார்"- உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உத... மேலும் பார்க்க

அண்ணாமலை: `ராஜினாமாவை ஏற்ற பாஜக தலைமை!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தலைவர்களை நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தனது ராஜி... மேலும் பார்க்க

"தற்போதைய ஆட்சி நீடிக்காது; காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது"- டி.ஆர்.பாலு கூறியதென்ன?

கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூன்.4) அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய டி.ஆர் பாலு, " தளபதியால் (ஸ... மேலும் பார்க்க

'கேரள மாநில கடன் ரூ.5.07 லட்சம் கோடி; ஓய்வூதிய வயதை உயர்த்த வேண்டும்'- வெள்ளை அறிக்கையில் பரிந்துரை!

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் நிதித்துறையைக் கவனிக்கும் முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சட்டமன்றத்தில்... மேலும் பார்க்க