செய்திகள் :

`ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் தோற்றோம்' - பொதுவெளியில் போட்டுடைத்த தவெக வேட்பாளர்! - என்ன நடந்தது?

post image

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்டவர், அதியமான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

இந்த நிலையில், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அதியமான், ``ஓமலூர் தொகுதிக்கு அருகில் உள்ள சேலம் மேற்கு தொகுதியின் நம்முடைய வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் வழங்கி பெற்றிருக்கிறார்.

தோல்வியடைந்த வேட்பாளர் அதியமான்

ஆனால், பக்கத்து தொகுதியில் எதுவும் நாம் தரவில்லை என மக்கள் அதிருப்தி அடைந்தனர். மாதக்கணக்கில் மக்களிடம் சென்ற சேர்த்த பிரசாரம் அனைத்தும் இவர் கொடுத்த பணத்தால் வீணானது. 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் நமக்கு வராமல் போனதால் தோல்வி ஏற்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தவெக எம்.எல்.ஏ ஓட்டுக்கு பணம் கொடுத்து தான் வெற்றிபெற்றார் என அக்கட்சியில் தோல்வியைத் தழுவிய வேட்பாளர் ஒருவர் பொதுவெளியில் பேசியிருப்பது, பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது.

``பாஜக-வுடனான நமது பார்வைகள் ஒத்துப்போகவில்லை!" - அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தில் இருப்பது என்ன?

பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பா.ஜ.க தலைமை நிதின் நபிக்கு கடிதம் அளித்திருந்தார். இன்று அவர் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்த... மேலும் பார்க்க

"எந்த இடத்தில் இணைந்தனோ அதே இடத்தில் வந்து.!" - பாஜகவிலிருந்து விலகியது குறித்து அண்ணாமலை | Live

தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து மோதல்களின் காரணமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்ற... மேலும் பார்க்க

பிரவீன் சக்கரவர்த்தி பதிவு 'அதிக பிரசங்கித்தனம்' - கண்டனம் தெரிவித்த சிபிஎம் சண்முகம் - காரணம் என்ன?

தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு கொடுத்திருக்கிறது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி எம்.பி தேர்தலுக்கு போட்டியிடுவார் என்று அதிகாரப... மேலும் பார்க்க

‘2006-ல் காங்கிரஸ் தயவுடன் பதவி சுகத்தை அனுபவித்தது யார்?’ – உதயநிதிக்கு காங்கிரஸ் பதிலடி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் , “காங்கிரஸ் பேரியக்கத்தை துரோகிகள் என்று உதயநிதி சொல்லி இருப்பது தந்தையும், தனையனும் முதல்வர் ஆசை கைகூடவில்லை என்ற ஏக்கத்தின் உ... மேலும் பார்க்க

`இனி கொடுத்தாலும் வேண்டாம்!' - இரண்டே நாளில் அமைச்சர் பதவியை உதறிய முக்கிய முகம்; அப்செட்டில் DKS

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முதல்வர் டி.கே.சிவகுமார் அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை... மேலும் பார்க்க

``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன?

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து, பின் அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியவர் அண்ணாமலை. இவர் தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை தலைமையும் ஏற்றுக்கொண்டது. ரா... மேலும் பார்க்க