செய்திகள் :

`'ஆறு மாதம் சும்மா இருப்பதாகக் கூறினீர்களே' என்று முதல்வர் புலம்புகிறார்"- உதயநிதி ஸ்டாலின்

post image

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரின் உரையில், ``நடப்பு ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குத் தங்களுக்கு எந்தெந்தத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. அமைச்சர் ஒருவர், தான் சுற்றுச்சூழல் அமைச்சரா அல்லது சுற்றுலாத் துறை அமைச்சரா என்று செய்தியாளர்களிடமே கேட்கும் அவல நிலை இந்த ஆட்சியில் நீடிக்கிறது.

திமுக - உதயநிதி ஸ்டாலின் - நன்றி அறிவிப்பு கூட்டம்
திமுக - உதயநிதி ஸ்டாலின் - நன்றி அறிவிப்பு கூட்டம்

'ஒரு கோமாளி அரண்மனைக்குச் செல்வதால் அவன் அரசன் ஆகிவிட மாட்டான். அந்த அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த ஆட்சியில் பல கோமாளிகள் இணைந்து ரம்மியில் வரும் 13 ஜோக்கர்களைப் போலச் செயல்படுகிறார்கள். இதனைத்தான் நம்முடைய தலைவர் 'மாயாஜால கவர்ச்சி ஆட்சி' என்று விமர்சித்தார். திராவிட மாடல், ஒன் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று பெருமையோடு நகர்ந்த தமிழ்நாட்டை, இன்று 'சோபா மாடல்' அரசாக மாற்றிய பெருமைதான் இவர்களைச் சேரும்.

முதலமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தார். சட்டமன்றத்தில் நான் சுட்டிக்காட்டிய பிறகுதான் அவர் திருச்சிக்குச் சென்றார். பொதுவாக ஒரு முதலமைச்சர் மாவட்டங்களுக்குச் சென்றால் புதிய திட்டங்களை அறிவிப்பது வழக்கம். ஆனால், இன்னும் ஆறு மாதங்களில் வரவிருக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை மனதில் வைத்துச் சென்ற அவர், எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. 'நல்லா வாயில் வருது...' எனப் பேசிய முதல்வர் எப்போது பார்த்தாலும் 'தி.மு.க Vs த.வெ.க' என்றே பேசுகிறாரே தவிர, மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களோ, வார்த்தைகளோ வரவில்லை. நம் டி.ராஜேந்தர் பாணியில் 'தூரசக்தி, பாறசக்தி, ஓரசக்தி' என முதலமைச்சர் ரைமிங்காக டயலாக் பேசுகிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாட்டு முதல்வராக தேர்வு செய்துவிட்டோமே என மக்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள். மக்கள் அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துவிட்ட நிலையில், அந்த ஜனநாயக முடிவை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆட்சி அமைப்பதற்குத் தான் எந்தக் குதிரை பேரமும் நடத்தவில்லை என முதலமைச்சர் தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறார். மன்னார்குடி எம்.எல்.ஏ-வை அவருடைய கட்சித் தலைவருக்கே தெரியாமல் கடத்திச் சென்ற சம்பவத்தைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். "இதற்குப் பெயர் தூய சக்தியா அல்லது தூரசக்தியா? மற்ற கட்சிகளை முதலமைச்சர் அல்லு சில்லு கட்சிகள் என்கிறார்.

அப்படியென்றால் எதற்காக அந்தக் கட்சித் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துச் சால்வை அணிவித்து, சோபா செட்டுகளை அனுப்பி புகைப்படம் எடுத்தீர்கள். இது, கவுண்டமணிக்குத் தெரியாமல் பின்வாசல் வழியாக வடிவேலுவுக்குச் செந்தில் இளநீர்களை அனுப்பிக் கடை வைக்க உதவியதைப் போல, இன்று எம்.எல்.ஏ-க்களை ஒவ்வொன்றாக உருவிக்கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி அரசியலால் வெற்றி பெற்றதாக நாம் விமர்சிப்பதில் முதலமைச்சருக்குக் கோபம் வருகிறது. மறைந்த தலைவர் கலைஞர் அவர்களைப் போல இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காகச் சிறை சென்றாரா, அல்லது நம் தலைவர் ஸ்டாலின் அவர்களைப் போல மிசா கொடுமைகளை அனுபவித்து ஓராண்டு சிறையில் இருந்தாரா? கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆகும் நிலையில், மாநில உரிமைகளுக்காகவோ அல்லது ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராகவோ எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறாரா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாடு முழுவதும் மக்களைச் சந்தித்துத் கொள்கைகளைச் சொல்லி வாக்குதான் கேட்டாரா? தன் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் கூட அவருக்குத் தெரியாது. இதனால்தான் இதனைச் 'ரீல்ஸ் மற்றும் கவர்ச்சி அரசியல்' என்கிறோம். புதிய முதலமைச்சருக்குத் தன்னைப் பற்றியே எப்பொழுதும் சிந்திக்கும் 'போபியா' என்ற கற்பனையான பயம் இருக்கிறது.

அவர் கோட் சூட் அணிவதைப் பற்றி நாங்கள் யாரும் எந்த விமர்சனமும் செய்யாத நிலையிலும், அவர் கருப்புக் கோட் அணிவது பெரியாரின் கொள்கை என்று ஒரு புதிய விளக்கத்தை அவரே கொடுத்துக்கொள்கிறார். தனது ஜோசியரை அதிகாரப்பூர்வ அரசு ஆலோசகராக நியமிக்க முயன்று தோல்வியடைந்தவர்தானே அவர். அவரா உண்மையான பெரியாரியவாதி?

ஆளுங்கட்சியினர் திமுக மீது தொடர்ந்து பழியைப் போட்டு மக்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் ஒரு பாதிப்பு என்றால் தி.மு.க-வும் அதன் தலைவரும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். களத்திற்கு வந்து போராடுவோம் ஆரம்பத்தில் ரீல்ஸைப் பார்த்து வாக்களித்த மக்கள், இன்று தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் மற்றும் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு வாயிலாகச் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியை தி.மு.க எவ்வாறு ஓடவிட்டது என்பதைப் பார்த்து ரசித்து வருகிறார்கள். மக்களின் இந்த விழிப்புணர்வுதான் தற்போதைய ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கான தொடக்கம். கவர்ச்சி அரசியலுக்கு மக்கள் விரைவில் ஒரு முடிவுரை எழுதுவார்கள்.

திமுக - உதயநிதி ஸ்டாலின் - நன்றி அறிவிப்பு கூட்டம்
திமுக - உதயநிதி ஸ்டாலின் - நன்றி அறிவிப்பு கூட்டம்

75 ஆண்டுகளைக் கடந்து பவள விழா கண்ட தி.மு.க, பார்க்காத வெற்றிகளும் இல்லை, சந்திக்காத தோல்விகளும் இல்லை. எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் மீண்டும் எழுந்து வரும் வல்லமை கொண்டது. 1976-ல் காங்கிரஸ் அரசு எமர்ஜென்சியைக் கொண்டு வந்தபோது, தமிழ்நாட்டில் ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் பக்கம் நின்று எமர்ஜென்சியை எதிர்த்த பாரம்பரியம் கலைஞர் வழிவந்த தி.மு.க-விற்கு உண்டு. பயம் என்பது உடன்பிறப்புகளின் ரத்தத்திலேயே கிடையாது. யார் பயந்து ஓடப்போகிறார்கள் என்பதை மக்கள் விரைவில் பார்ப்பார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்று 25 நாட்களேயான நிலையில், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதையும், திருவள்ளுவருக்கு மீண்டும் காவி வண்ணம் பூசப்படுவதையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மேகதாது அணையைக் கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சவால் விடுத்தும், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க துணிவில்லாமல் பயந்துபோய் நிற்கிறது இந்த அரசு. தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் எனச் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதனைத் தட்டிக்கேட்டால், 'ஆறு மாதம் சும்மா இருப்பதாகக் கூறினீர்களே' என்று முதலமைச்சர் புலம்புகிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் ஆறு மாத அவகாசமே தவிர, அன்றாடச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளில் சொதப்பினால் நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கடந்த 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, 'வாக்களிக்காத மக்களும் வருத்தப்படும் அளவிற்கு நல்லாட்சி தருவோம்' என்று நம் தலைவர் கூறினார். ஆனால் இன்று, இந்த அரசுக்கு ஓட்டுப் போட்டவர்களே வருந்தும் நிலைதான் உள்ளது. ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். ஆனால் இன்று விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். 200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் இலவசம் கிடையாது என்று மக்களை ஏமாற்றிவிட்டார்கள். மாதந்தோறும் 2,500 ரூபாய் உரிமைத் தொகை, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், புடவை, தங்கச் சங்கிலி என அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை.

அரசியல் சதியால்தான் தி.முக. தோற்றது என்று பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தொலைக்காட்சி, நாளிதழ்கள் மற்றும் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியை நாம் எப்படி ஓடவிட்டோம் என்பதை மக்கள் பார்த்து ரசித்துள்ளார்கள். இந்த விழிப்புணர்வுதான் தற்போதைய ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக அமையும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய நம்முடைய தலைவர் ஒரு குழுவை அமைத்துள்ளார். அக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தோல்வி மற்றும் வெற்றிக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பார்கள்.

திமுக - உதயநிதி ஸ்டாலின் - நன்றி அறிவிப்பு கூட்டம்
திமுக - உதயநிதி ஸ்டாலின் - நன்றி அறிவிப்பு கூட்டம்

அதன் அடிப்படையில் கழகத்தின் நலன் கருதி தலைவர் நல்ல முடிவுகளை எடுப்பார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எப்போதும் போலத் தன் தாராள வெற்றியை நிரூபித்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் பல மடங்கு பெரிய வெற்றிகளை நாம் குவிப்போம். ஐந்து ஆண்டுகள் மக்களுக்காக உழைத்ததைப் போல நானும் உங்களோடு களத்தில் நின்று உழைக்கத் தயாராக இருக்கிறேன். மீண்டும் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' என்று நம் தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் நாள் தொலைவில் இல்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரவீன் சக்கரவர்த்தி பதிவு 'அதிக பிரசங்கித்தனம்' - கண்டனம் தெரிவித்த சிபிஎம் சண்முகம் - காரணம் என்ன?

தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு கொடுத்திருக்கிறது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி எம்.பி தேர்தலுக்கு போட்டியிடுவார் என்று அதிகாரப... மேலும் பார்க்க

‘2006-ல் காங்கிரஸ் தயவுடன் பதவி சுகத்தை அனுபவித்தது யார்?’ – உதயநிதிக்கு காங்கிரஸ் பதிலடி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் , “காங்கிரஸ் பேரியக்கத்தை துரோகிகள் என்று உதயநிதி சொல்லி இருப்பது தந்தையும், தனையனும் முதல்வர் ஆசை கைகூடவில்லை என்ற ஏக்கத்தின் உ... மேலும் பார்க்க

`இனி கொடுத்தாலும் வேண்டாம்!' - இரண்டே நாளில் அமைச்சர் பதவியை உதறிய முக்கிய முகம்; அப்செட்டில் DKS

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முதல்வர் டி.கே.சிவகுமார் அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை... மேலும் பார்க்க

`ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் தோற்றோம்' - பொதுவெளியில் போட்டுடைத்த தவெக வேட்பாளர்! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்டவர், அதியமான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்த... மேலும் பார்க்க

``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன?

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து, பின் அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியவர் அண்ணாமலை. இவர் தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை தலைமையும் ஏற்றுக்கொண்டது. ரா... மேலும் பார்க்க

அண்ணாமலை: `ராஜினாமாவை ஏற்ற பாஜக தலைமை!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தலைவர்களை நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தனது ராஜி... மேலும் பார்க்க