செய்திகள் :

ராகுலின் நம்பிக்கை; விஜய்யின் நண்பர்; திமுக எதிர்ப்பு! ராஜ்யசபா செல்லும் பிரவீன் சக்கரவர்த்தி யார்?

post image

தமிழகத்தில் காலியாக ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு கொடுத்திருக்கிறது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி எம்.பி ஆக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டனர். ராகுலின் நெருங்கிய நண்பராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி எப்படி இந்த இடத்தை எட்டினார்?

பிரவீன் சக்கரவர்த்தி

பிரவீன் சக்கரவர்த்தி பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். அதன்பிறகு MBA முடித்துவிட்டு அமெரிக்காவில் Wall Street இல் தொழில் நிர்வாகம் சார்ந்த பணிகளில் வேலை செய்து வந்தார். 2009 இல் அப்போதைய காங்கிரஸ் அரசில் சில குழுக்களில் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு பிரவீன் சக்கரவர்த்திக்கு கிடைக்கிறது.

அவரின் கல்வித்தகுதியும் பணி அனுபவமும் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. அரசியலில் ஆர்வம் ஏற்படும் பிரவீன் சக்கரவர்த்தி அரசியல் சார்ந்த படிப்புகளையும் முடித்து பட்டம் பெறுகிறார். அரசியல் களத்தில் காங்கிரஸில் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்புகிறார். தன்னுடைய விருப்பத்தை ராகுலிடம் தெரியப்படுத்துகிறார். 2014 தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் ராகுல் கொண்டு வந்திருந்த காலம் அது. துடிப்பான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்பது ராகுலின் எண்ணம்.

பிரவீன் சக்கரவர்த்தி
பிரவீன் சக்கரவர்த்தி

பிரவீனை காங்கிரஸின் தரவு பகுப்பாய்வு அணியின் தலைவராக ராகுல் நியமிக்கிறார். இதன்பிறகுதான் ராகுலுக்கும் பிரவீனுக்குமான நெருக்கம் இன்னும் அதிகமாகிறது. 2019 தேர்தலுக்காக ராகுலின் வழிகாட்டலில் வியூகங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றினார். தேர்தல் முடிவுகள் காங்கிரஸூக்கு சாதகமாக அமையவில்லை. கட்சிக்குள் பிரவீன் மீது அதிருப்தி உண்டாகிறது. '160-180 சீட்களை ஜெயிப்போம் என ராகுலை பிரவீன் நம்ப வைத்துவிட்டார். உண்மை நிலையை எடுத்து கூறியிருந்தால் வேறு மாதிரியாக வியூகங்களை வகுத்து கௌரவமான இடங்களிலாவது வென்றிருக்க முடியும்' என குமுறினர். பிரவீனை தரவு பகுப்பாய்வு குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்றனர். ஆனால், ராகுல் அதற்கெல்லாம் இணங்கி போகவில்லை. பிரவீனை சிக்கல்களிலிருந்து காப்பாற்றினார்.

'All India Professional Congress' என்ற ஒரு அமைப்பை ராகுல் தொடங்கினார். அதாவது டாக்டர், அறிவியலாளர், தொழிலதிபர் என வேறு வேறு துறைகளில் அரசியல் ஈடுபாட்டோடு இருக்கும் நபர்களை ஒரே புள்ளியில் இணைக்கும் அமைப்பு இது. இப்படியொரு அமைப்பை உருவாக்கி கட்சியை வலுப்படுத்தலாம் என்பது ராகுலின் ஐடியா. இந்த அமைப்பின் தலைவராக சசி தரூர் செயல்பட்டு வந்தார். 2023 இல் அவரை நீக்கிவிட்டு அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு ராகுலின் அறிவுறுத்தலோடு பிரவீன் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார். இதெல்லாம் கட்சிக்குள் ராகுலுக்கு எந்தளவுக்கு நெருக்கமாக பிரவீன் இருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டின.

பிரவீன் சக்கரவர்த்தி

களத்திலிருந்து வந்த காங்கிரஸ்க்காரர் என்பதாலோ நிர்வாகிகளின் ஆதரவோ தொண்டர்களின் ஆதரவோ பிரவீனுக்கு இல்லாமல் இருந்தது. இதனாலயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட முயன்றும் அந்த ஆசை பிரவீனுக்கு கைகூடவில்லை. திமுக தரப்பிலிருந்தும் தன்னுடைய விருப்பத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள் என பிரவீன் நினைத்ததாக காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் உண்டு.

இந்நிலையில்தான் 2026 தேர்தலை நோக்கி முன்னேறுகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் முதல் வெடிகுண்டை பிரவீன் வீசினார். விஜய்யை ஒரு எதிரியே இல்லையென திமுக கட்டமைத்து வந்த நிலையில், விஜய் ஒரு வலுவான போட்டியாளர் அவருக்கு பெரிய வாக்கு வங்கி இருக்கிறதென பிரவீன் சக்கரவர்த்தி தரவுகளை பகிர்ந்து பொதுவெளியில் பேச ஆரம்பித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி அது அவருடைய தனிப்பட்ட கருத்து என கடந்து போனது. ஆனாலும் அவர் ஓயவில்லை. திமுகவுடன் கூட்டணி பேச கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு திமுக தலைவரை சந்தித்த இரண்டே நாளில் பிரவீன் போய் விஜய்யை சந்தித்து வந்தார்.

'விஜய்யிடம் அரசியல் பேசவில்லை' என மழுப்பினார். தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்தும் தெரிவித்து வந்தார். ராகுலுக்கு நெருக்கமானவர் என்பதால் ராகுலின் அனுமதியில்லாமல் விஜய்யை சந்தித்திருக்க மாட்டார் என்றும் அனுமானிக்கப்பட்டது.

தேர்தல் நெருங்குகையில் மாணிக்கம் தாகூரும் பிரவீனுடன் இணைந்து திமுக கூட்டணிக்கு எதிராக பேசினார். இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வப்பெருந்தகை கார்கேவிடம் முறையிட்டார். இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 'எங்களின் கட்சி வளர்ச்சிக்காக பேசியவர்கள் மீது எதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்?' என டீம் ராகுலை சேர்ந்த கிரிஷ் சோடங்கர் பேசினார்.

தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்
தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்

தவெக - காங்கிரஸ் இடையே இணைப்புப் பாலமாக இருந்ததால்தான் பதவியேற்பு விழாவில் பீரவீன் சக்கரவர்த்தியை என்னுடைய நண்பர் என்றும் விஜய் குறிப்பிட்டிருந்தார். இப்போது தன்னுடைய நண்பருக்கே ராஜ்ய சபா சீட்டையும் விட்டுக் கொடுத்திருக்கிறார். 2024 இல் கிடைக்காத எம்.பி பதவி இப்போது பிரவீன் சக்கரவர்த்திக்கு கிடைத்திருக்கிறது. அதேமாதிரி, காங்கிரஸூக்குள் இருக்கும் திமுக எதிர்ப்புக் குழுவையும் விஜய் உற்சாகப்படுத்தி முக்கியமான காய் நகர்த்தலை செய்திருக்கிறார்!

`ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் தோற்றோம்' - பொதுவெளியில் போட்டுடைத்த தவெக வேட்பாளர்! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்டவர், அதியமான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்த... மேலும் பார்க்க

``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன?

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து, பின் அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியவர் அண்ணாமலை. இவர் தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை தலைமையும் ஏற்றுக்கொண்டது. ரா... மேலும் பார்க்க

`'ஆறு மாதம் சும்மா இருப்பதாகக் கூறினீர்களே' என்று முதல்வர் புலம்புகிறார்"- உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உத... மேலும் பார்க்க

அண்ணாமலை: `ராஜினாமாவை ஏற்ற பாஜக தலைமை!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தலைவர்களை நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தனது ராஜி... மேலும் பார்க்க

"தற்போதைய ஆட்சி நீடிக்காது; காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது"- டி.ஆர்.பாலு கூறியதென்ன?

கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூன்.4) அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய டி.ஆர் பாலு, " தளபதியால் (ஸ... மேலும் பார்க்க

``அமைச்சர் ரீல்ஸ் போடுவதில் என்ன தவறு? இப்போதே விமர்சிக்கக் கூடாது" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பதி... மேலும் பார்க்க