செய்திகள் :

காங்கிரஸ்: `தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி' - பிரவீன் சக்ரவர்த்தியின் பதிவு வைரல்!

post image

அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் த.வெ.க தனி பெரும் கட்சியாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இருந்து த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். எனவே, மாநிலங்களவை இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, அந்த இடத்தை தங்களுக்கே ஒதுக்குமாறு த.வெ.க தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.

ராகுல் காந்தி - பிரவீன் சக்ரவர்த்தி
ராகுல் காந்தி - பிரவீன் சக்ரவர்த்தி

அதன் அடிப்படையில், காங்கிரஸ் பொறுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்திக்கு மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிரவீன் சக்ரவர்த்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த LoP ராகுல் காந்தி மற்றும் தமிழக CM விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்ணாமலை: `ராஜினாமாவை ஏற்ற பாஜக தலைமை!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தலைவர்களை நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தனது ராஜி... மேலும் பார்க்க

"தற்போதைய ஆட்சி நீடிக்காது; காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது"- டி.ஆர்.பாலு கூறியதென்ன?

கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூன்.4) அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய டி.ஆர் பாலு, " தளபதியால் (ஸ... மேலும் பார்க்க

``அமைச்சர் ரீல்ஸ் போடுவதில் என்ன தவறு? இப்போதே விமர்சிக்கக் கூடாது" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பதி... மேலும் பார்க்க

'கேரள மாநில கடன் ரூ.5.07 லட்சம் கோடி; ஓய்வூதிய வயதை உயர்த்த வேண்டும்'- வெள்ளை அறிக்கையில் பரிந்துரை!

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் நிதித்துறையைக் கவனிக்கும் முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சட்டமன்றத்தில்... மேலும் பார்க்க

ராகுலின் நம்பிக்கை; விஜய்யின் நண்பர்; திமுக எதிர்ப்பு! ராஜ்யசபா செல்லும் பிரவீன் சக்கரவர்த்தி யார்?

தமிழகத்தில் காலியாக ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு கொடுத்திருக்கிறது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி எம்.பி ஆக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து... மேலும் பார்க்க