செய்திகள் :

'கேரள மாநில கடன் ரூ.5.07 லட்சம் கோடி; ஓய்வூதிய வயதை உயர்த்த வேண்டும்'- வெள்ளை அறிக்கையில் பரிந்துரை!

post image

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் நிதித்துறையைக் கவனிக்கும் முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்தார். நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.ஆர்.ஜோதிலால் மற்றும் கே.எம்.சந்திரசேகர் ஆகியோரின் தலைமையில் பொருளாதார வல்லுநர்கள் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். ​மாநிலத்தின் பொருளாதார நிலையும் வளர்ச்சியும் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய இடதுசாரி அரசு கொண்டு வந்த கிஃபி (KIIFB) கட்டமைப்பு பெரும் கடன்பொறுப்பாக மாறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை அதிகரித்து 5.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுடன், மாநில வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு வட்டி கட்டுவதற்கே செலவிடப்படுகிறது. சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, வளர்ச்சிச் செலவுகளை வெட்டிச் சுருக்கும் குறுக்குவழிதான் மாநிலத்தைச் சீரழித்து வருவதாகவும், அகவிலைப்படி (DA) வழங்காமல் ஒத்திவைத்ததால் ஏற்பட்ட நிலுவைத் தொகைதான் பெருகிப் பெருகி 48,733 கோடியை எட்டியுள்ளது என்றும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மாநிலம் ஓராண்டில் வாங்கும் மொத்தக் கடனை விடவும் அதிகமாகும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் 78,851 கோடி ரூபாயாக உள்ள நிலையில், தேசிய அளவில் வேலையின்மை விகிதம் வெறும் 4.5 விழுக்காடாக இருக்கும்போது, கேரளாவில் அது 20.7 விழுக்காட்டை எட்டியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, செலவைக் குறைப்பதால் மட்டும் பயனில்லை என்றும், வருவாயைப் பெருக்க புதிய வழிகளைத் தேடுவதோடு, 'ஒருங்கிணைந்த நிதி' ஒன்றை உருவாக்கிப் பொறுப்புகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வெள்ளை அறிக்கை வலியுறுத்துகிறது.

முன்னாள் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால்

நிதிச் சீர்திருத்தங்கள் குறித்து இந்த அறிக்கையில் பல்வேறு முக்கியப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சட்டப்பூர்வ ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வுபெறும் வயதை 56-லிருந்து உயர்த்தினால் 6,000 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வுபெறும் வயது 60 ஆக உள்ளது. தற்போது மாநிலச் செலவினங்களின் முக்கால்வாசிப் பகுதியைச் சம்பளமும் ஓய்வூதியமும்தான் ஆக்கிரமிக்கின்றன. மேலும், நலத்திட்ட ஓய்வூதிய விநியோகம் பெரும்பாலான இடங்களில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நேரடியாகக் கொண்டு போய்க் கொடுக்கப்பட்டு வருவதை மாற்றி, பட்டியலிடப்பட்ட வங்கிகள் மூலம் நேரடியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-ஐ விரிவுபடுத்த முன்னணி முகமையின் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், கே.எஸ்.இ.பி, வாட்டர் அத்தாரிட்டி, கே.எஸ்.ஆர்.டி.சி ஆகியவற்றை மேம்படுத்த சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு, கே-டிஸ்க், கே-ரெயில் ஆகியவற்றின் பலன்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. திட்டக் குழுவை மறுசீரமைக்கவும், தலைமைச் செயலகத்தில் கோப்பு நேர மேலாண்மை முறையைக் கொண்டு வரவும், கன்சல்டன்சி ஒப்பந்தங்களை ஆராயவும், மத்திய அரசுடன் நல்லுறவை மீண்டும் நிலைநாட்டவும் இந்த வெள்ளை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் ஆவேசமாக பேசும் முதல்வர் வி.டி.சதீசன்

இந்த வெள்ளை அறிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய முதலமைச்சர் வி.டி.சதீசன், "முந்தைய அரசின் முகத்திற்கு நேராகப் பிடிக்கப்பட்ட கண்ணாடிதான் இந்த வெள்ளை அறிக்கை. அவர்களின் தவறான நிர்வாகத்தை, வழக்கமான கம்யூனிஸ்ட் வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு நியாயப்படுத்தி வந்தார்கள்" என விமர்சித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் கே.என். பாலகோபால், "தனியார்மயமாக்கலுக்கு நியாயவாதம் தேடுவதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கேரள கடன் வலையில் சிக்கவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது" என்றார். இதுபற்றி பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எம்.எல்.ஏ, "பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறிய விஷயங்களைத்தான் இந்த வெள்ளை அறிக்கை வழியாகக் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இனிமேலாவது யதார்த்தப் பூர்வமாக மத்திய அரசுடன் ஒத்துழைத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்" என்றார்.

`ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் தோற்றோம்' - பொதுவெளியில் போட்டுடைத்த தவெக வேட்பாளர்! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்டவர், அதியமான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்த... மேலும் பார்க்க

``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன?

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து, பின் அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியவர் அண்ணாமலை. இவர் தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை தலைமையும் ஏற்றுக்கொண்டது. ரா... மேலும் பார்க்க

`'ஆறு மாதம் சும்மா இருப்பதாகக் கூறினீர்களே' என்று முதல்வர் புலம்புகிறார்"- உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உத... மேலும் பார்க்க

அண்ணாமலை: `ராஜினாமாவை ஏற்ற பாஜக தலைமை!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தலைவர்களை நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தனது ராஜி... மேலும் பார்க்க

"தற்போதைய ஆட்சி நீடிக்காது; காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது"- டி.ஆர்.பாலு கூறியதென்ன?

கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூன்.4) அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய டி.ஆர் பாலு, " தளபதியால் (ஸ... மேலும் பார்க்க

``அமைச்சர் ரீல்ஸ் போடுவதில் என்ன தவறு? இப்போதே விமர்சிக்கக் கூடாது" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பதி... மேலும் பார்க்க