செய்திகள் :

மதுரை மாநகராட்சி: ரூ. 200 கோடி முறைகேடு புகாரில் தீவிர விசாரணை; அதிமுக கவுன்சிலர்கள் DIG-யிடம் மனு

post image

கடந்த வருடம் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்து வரி வசூல் மென்பொருளில் (UTIS software) ஏற்பட்ட தொழில்நுட்ப இடைவெளியைப் பயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் கூட்டு சேர்ந்து ரூ. 200 கோடி வரை முறைகேடு செய்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் மதுரையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, மாநகராட்சியின் மேயர் இந்திராணி பதவி விலகினார். மேலும் புகார் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் நேற்று ஒன்றிணைந்து மதுரை சரக டிஐஜியிடம் மனு அளித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, ''மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.200 கோடி முறைகேடு குறித்த புகாரை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.  

தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை திருப்திகரமாக இல்லை. 

மதுரை அ.தி.மு.க கவுன்சிலர்கள்
மதுரை அ.தி.மு.க கவுன்சிலர்கள்

இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த நிதியை மீட்டெடுத்து மாநகராட்சிக்குத் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

"இந்தியா 'விஸ்வகுரு' ஆவதற்கான வலிமையும் கட்டமைப்பும் நம்மிடம் இல்லை" - RSS தலைவர் மோகன் பகவத்

'இந்தியா உலக அரங்கில் ஒரு வலிமைமிக்க நாடாக மாறுவதையும், மறுமலர்ச்சி அடைவதையும் சில சக்திகள் விரும்பவில்லை' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த... மேலும் பார்க்க

’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கு பருவ மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவம... மேலும் பார்க்க

"பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜக-வின் புதிய உத்தி" - அண்ணாமலையை விமர்சித்த பெ.சண்முகம்

அண்ணாமலை, பாஜக-வில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். பின்னாளில் அது கட்சியாக உருவெடுக்கும் என்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார... மேலும் பார்க்க

'ஜம்பம் அடித்த பிரவீன் சக்கரவர்த்தி; உஷ்ணமான விஜய்!' - கம்யூ.,க்களை தேடி ஓடிய காங்கிரஸ்

தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா எம்.பி சீட்டை காங்கிரஸூக்கு கொடுத்திருந்தது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், இ... மேலும் பார்க்க

"நான் கிரிக்கெட்டைவிட்டு விலக தாதா தாவூத்தான் காரணம்" - லலித் மோடி அடுக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

தான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்க... மேலும் பார்க்க

`மோடி எதிர்ப்பு மட்டுமே போதுமா?' - ஸ்டாலின் முடிவும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்? - ஓர் அலசல்!

2023 ஜூன் மாதத்தில் 28 கட்சிகளுடன் தொடங்கப்பட்ட 'இந்தியா' கூட்டணி, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது. அந்த தேர்தலில், உத்த... மேலும் பார்க்க