செய்திகள் :

எவரெஸ்ட்டில் நடந்த அதிசயம்; இறந்துவிட்டார் என நினைத்த வழிகாட்டி 6 நாள்களுக்குப் பின் வந்தார்!

post image

உறைபனி, மிகக் குறைந்த ஆக்சிஜன் அளவு கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் ஆபத்தான பகுதியில், 6 நாள்கள் தனியாகப் போராடி, உயிருடன் மீண்டிருக்கிறார் ஒரு நேபாள மலையேற்ற வழிகாட்டி.

எவரெஸ்ட் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஒரு பெரும் அதிசய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்டவரின் பெயர் தவா ஷெர்பா (Dawa Sherpa). இவருக்கு வயது 52.

புகழ்பெற்ற மலையேற்ற வீரர் எட்மண்ட் ஹிலாரியின் நினைவாக இவரை ஹிலாரி தவா என்றும் அழைப்பார்கள்.

Dawa Sherpa
Dawa Sherpa

மே 2026-ல், எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்துவிட்டு, மலையிலிருந்து கீழே இறங்கும்போது, சுமார் 7,500 மீட்டர் (24,600 அடி) உயரத்தில் உள்ள 'கேம்ப் 3' பகுதிக்கு அருகில் அவர் திடீரென காணாமல் போனார்.

எவரெஸ்ட் மலையில் 8,000 மீட்டருக்கு மேல் உள்ள பகுதியை 'மரண மண்டலம்' (Death Zone) என்பார்கள். தவா ஷெர்பா காணாமல் போன 7,500 மீட்டர் பகுதியும் அதற்கு இணையான கடுமையான குளிர், மிகக் குறைந்த ஆக்சிஜன் கொண்ட பகுதியாகும்.

அவர் காணாமல் போய் 5 நாள்கள் கடந்ததால், கடுமையான குளிரிலும் உணவு, ஆக்சிஜன் இல்லாமலும் அவர் இறந்திருப்பார் என்றே அனைவரும் கருதினர். அவரது மனைவி காத்மாண்டுவில் அவருக்கு இறுதிச்சடங்கு வழிபாடுகளையும் செய்யத் தொடங்கிவிட்டார்.

அவருடன் பயணித்த பிரிட்டிஷ் ராயல் மரைன் முன்னாள் வீரரான கிறிஸ் த்ரால் என்பவர், தவா ஷெர்பா இறந்துவிட்டார் என நினைத்து சமூக வலைத்தளத்தில் உருக்கமாக இரங்கல் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

Dawa Sherpa
Dawa Sherpa

Dawa Sherpa வியாழக்கிழமை அன்று, எவரெஸ்ட் மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தூய்மைக் குழுவினர், பனிப்பாறைகளுக்கு இடையே ஒரு மனிதர் மெதுவாகத் தவழ்ந்து கீழே இறங்கி வருவதைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோதுதான், அது தவா ஷெர்பா என்பது தெரியவந்தது!

``எவரெஸ்ட் வரலாற்றில் இவ்வளவு உயரத்தில், எந்தவிதத் துணையும் இல்லாமல் 6 நாள்கள் தனியாகப் போராடி, உயிரைக் காத்துக் கொண்டு, அவராகவே தவழ்ந்து கீழே இறங்கி வந்ததை இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை. இது முற்றிலும் ஒரு அற்புதம்!" என்று அவரைத் தேடும் பணியை ஒருங்கிணைத்த '8K Expeditions' நிறுவனத்தின் இயக்குநர் பெம்பா ஷெர்பா தெரிவித்துள்ளார்.

எப்படி உயிர் பிழைத்தார்?

தவா ஷெர்பா பல வருட அனுபவம் வாய்ந்த ஒரு தேர்ந்த மலையேற்ற வழிகாட்டி. மலையில் ஆங்காங்கே மலையேறுபவர்கள் தங்கிவிட்டுச் சென்ற காலியான கூடாரங்களை அவர் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த உறைபனிக் காற்றிலிருந்து தப்பிக்கக் கூடாரங்களுக்குள் தங்கித் தன் உடலின் வெப்பநிலையை அவர் தக்க வைத்துள்ளார்.

பனியால் அவரது கைகள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் தன் நம்பிக்கையைக் கைவிடாமல் பேஸ் கேம்ப் நோக்கித் தவழ்ந்தபடியே முன்னேறியுள்ளார்.

மீட்கப்பட்டவுடன் தவா ஷெர்பா ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Dawa Sherpa
Dawa Sherpa

அவர் தற்போது நினைவுடன் இருப்பதாகவும், பேசுவதாகவும், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது மகள், "அப்பா எங்களை அடையாளம் கண்டுகொண்டார், பேசுகிறார். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு எவரெஸ்ட் மலையேற்ற சீசனில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்திருந்தாலும், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தகைய ஆபத்தான சூழலில், இயற்கையின் உச்சக்கட்ட சீற்றத்தை எதிர்த்து, 6 நாள்கள் மரணத்தோடு போராடி வென்று வந்த தவா ஷெர்பாவின் இந்த 'சுய மீட்பு' கதை மனித மனஉறுதியின் ஆகச்சிறந்த சான்றாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது.

`இந்த தொழில் மேல இருக்குற பாசத்துலதான் விடாம செஞ்சுட்டு இருக்கேன்'- ஒரு பானைக் கலைஞனின் கதை!

மண்ணில் தொடங்கும் ஒரு வாழ்க்கை:மண்ணுக்கு உயிர் இல்லை என்பார்கள். ஆனால் அந்த மண் ஒரு கலைஞனின் கைகளில் சுழலும்போது அது ஒரு பானையாக மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாகவும் மாறுகிறது.அந்த மண்ணோடு அர... மேலும் பார்க்க

'எத்தனை குழந்தைங்க, எத்தனை முறை வந்தாலும் பால் இலவசம் தான்' - நேயம் பேசும் நெல்லை சந்திரா பேக்கரி

'அந்த மனசு தான் சார் கடவுள்...' என்பதற்கு ஏற்ப திருநெல்வேலி, நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் சந்திரா பேக்கரியில் பசியோடு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுத்து வருகிறார், பேக்க... மேலும் பார்க்க

15 வயதில் இனவெறியை எதிர்த்து நின்ற க்ளாடெட் கோல்வின்; அமெரிக்க சட்டத்தையே மாற்றியவரின் கதை தெரியுமா?

ஒவ்வொரு நாளும் சிறப்பாகத் தொடங்க நமக்கு ஒரு மோட்டிவேஷன் தேவைப்படுகிறது. உலகமே எதிர்த்து நின்றாலும், "நான் செய்வது சரி, என் உரிமைக்காக நான் நிற்பேன்" என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தைரியம் அந்த நாளுக... மேலும் பார்க்க

“கோர்ட்ல கூட குழந்தையை திரும்பிப் பார்க்காத அம்மா… மகளுக்காக வாழும் அப்பா”

"வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் சவாலாகத்தான் இருக்கு. உடல் அளவுலேயும், மனசளவுலேயும் சோர்ந்து போயிட்டேன். ஆனா, என் பொண்ணுக்காக நான் வாழணும். வாழ்ந்தே ஆகணும். அவளுக்கு அப்பாங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய... மேலும் பார்க்க

கைமாறாக வாங்கிய பணம்; ரூ.1500-ஐ திருப்பிக் கொடுக்க நண்பரைத் தேடி அலையும் 84 வயது முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன். 84 வயதான இந்த முதியவர், கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். கோவையைச் சேர்ந்த இவரின் நண்பரான பால்சாமி என்பவர், கோவில்பட்டி கருவ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த தாய் - உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்த நெகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரின் மனைவி கோமளேஸ்வரி (வயது 57). இவர்களின் மகன் தினேஷ் குமார் (வயது 28). டிப்ளமோ படித்திரு... மேலும் பார்க்க