செய்திகள் :

"இந்தியா 'விஸ்வகுரு' ஆவதற்கான வலிமையும் கட்டமைப்பும் நம்மிடம் இல்லை" - RSS தலைவர் மோகன் பகவத்

post image

'இந்தியா உலக அரங்கில் ஒரு வலிமைமிக்க நாடாக மாறுவதையும், மறுமலர்ச்சி அடைவதையும் சில சக்திகள் விரும்பவில்லை' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "இந்தியா இப்போது மறுமலர்ச்சியை நோக்கிய திசையில் பயணிக்க வேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் உள்ளது.

மோகன் பகவத் - RSS
மோகன் பகவத் - RSS

ஆனால் இந்தியா உலக அரங்கில் ஒரு வலிமைமிக்க நாடாக மாறுவதையும், மறுமலர்ச்சி அடைவதையும் சில சக்திகள் விரும்பவில்லை.

இந்திய மக்களிடையே பிரிவினையை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள். மிகச் சிறிய விஷயங்களைக்கூட பெரிதாக்கி, நாட்டில் ஒருவித அமைதியின்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன.

நமது கலாசார விழுமியங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கச் செய்து, அவற்றைப் பலவீனப்படுத்த பல சக்திகள் முயன்று வருகின்றன.

இந்தியா இன்னும் 'விஸ்வகுரு' ஆவதற்குத் தயாராகவில்லை. அதற்கான போதிய வலிமையும் கட்டமைப்புகளும் நம்மிடம் இல்லை. இந்தியாவிடம் புதிய வழியையும் தீர்வுகளையும் உலகம் எதிர்பார்க்கிறது.

மோகன் பகவத் - RSS
மோகன் பகவத் - RSS

ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு நம்மிடம் போதிய ஆயத்தப் பணிகள் இல்லை. ஒட்டுமொத்த சமுதாயமும் தங்களின் சொந்த அடையாளம் மற்றும் நாட்டின் நோக்கத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு, இந்தியா மற்றும் உலக நன்மைக்காக ஒன்றிணைந்து, சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய நேரம் இது" என்று பேசியிருக்கிறார்.

மதுரை மாநகராட்சி: ரூ. 200 கோடி முறைகேடு புகாரில் தீவிர விசாரணை; அதிமுக கவுன்சிலர்கள் DIG-யிடம் மனு

கடந்த வருடம் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்து வரி வசூல் மென்பொருளில் (UTIS software) ஏற்பட்ட தொழில்நுட்ப இடைவெளியைப் பயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் க... மேலும் பார்க்க

’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கு பருவ மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவம... மேலும் பார்க்க

"பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜக-வின் புதிய உத்தி" - அண்ணாமலையை விமர்சித்த பெ.சண்முகம்

அண்ணாமலை, பாஜக-வில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். பின்னாளில் அது கட்சியாக உருவெடுக்கும் என்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார... மேலும் பார்க்க

'ஜம்பம் அடித்த பிரவீன் சக்கரவர்த்தி; உஷ்ணமான விஜய்!' - கம்யூ.,க்களை தேடி ஓடிய காங்கிரஸ்

தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா எம்.பி சீட்டை காங்கிரஸூக்கு கொடுத்திருந்தது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், இ... மேலும் பார்க்க

"நான் கிரிக்கெட்டைவிட்டு விலக தாதா தாவூத்தான் காரணம்" - லலித் மோடி அடுக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

தான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்க... மேலும் பார்க்க

`மோடி எதிர்ப்பு மட்டுமே போதுமா?' - ஸ்டாலின் முடிவும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்? - ஓர் அலசல்!

2023 ஜூன் மாதத்தில் 28 கட்சிகளுடன் தொடங்கப்பட்ட 'இந்தியா' கூட்டணி, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது. அந்த தேர்தலில், உத்த... மேலும் பார்க்க