செய்திகள் :

நூறு சாமி: "சென்னையை விட்டு போயிருவேன்; இடம் தேடிட்டிருக்கேன்" - என்ன சொல்கிறார் விஜய் ஆண்டனி?

post image

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நூறு சாமி'.

இப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன்.5) நடைபெற்றது.

நூறு சாமி
நூறு சாமி

இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனியிடம், ''இந்தப் படத்தில் விவசாயியாக நடித்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?" என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "எனக்கு பிடித்தது எளிமையான வாழ்க்கைதான். தொழில் காரணமாகத்தான் சென்னையில் இருக்கிறேன்.

ஸ்ரீதர் வேம்பு சார் (சோகோ நிறுவன தலைவர்) எப்படி தென்காசியில் போய் செட்டில் ஆனாரோ அதே மாதிரி நானும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பொள்ளாச்சி மாதிரியான இடங்களில் செட்டில் ஆகிவிடுவேன்.

உண்மையிலேயே அதற்காக இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். கள்ளக்குறிஞ்சியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரொம்ப நன்றாக இருந்தது.

 விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

கிராமத்து வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன். கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்திற்கு வரலாம், அங்கு மால் இருக்கிறது என்றெல்லாம் நினைக்காதீர்கள் இங்கு ஒன்றுமே இல்லை.

கிராமத்தில்தான் நல்ல காற்று, மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். அங்கு பரபரப்பு இருக்காது. கிராமத்து மக்கள் வாழக்கூடிய ஒரு வாழ்க்கை நல்ல வாழ்க்கை" என்று பேசியிருக்கிறார்.

லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? - உண்மை என்ன?

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இயக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசியிருந்த அவர், "எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்து... மேலும் பார்க்க

What To Watch: 'பரிமளா & கோ' டு 'பேட்ரியாட்' வரை - இந்த வாரம் வெளியான படங்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!பரிமளா அண்ட் கோ - தமிழ்பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் ச... மேலும் பார்க்க

விகடனின் 'லிங்கம்' வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் - மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்!

விகடன் டெலிவிஸ்டாஸின் 'லிங்கம்' வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.இந்த வெப்சீரிஸை லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய... மேலும் பார்க்க

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும், ஆனந்த விகடன் சினிமாவில் விருதுகள் நிகழ்வு நடைபெறும். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவர... மேலும் பார்க்க

'மாற்றத்தை விரும்பும் மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்' - புதிய இயக்கத்தைத் தொடங்கிய லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை இன்று தொடங்கியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். View this post ... மேலும் பார்க்க

பரிமளா & கோ விமர்சனம்: சீரியஸாக காமெடி செய்யும் ஊர்வசி - ஜெயராம் - மிஷ்கின் கூட்டணி பாஸாகிறதா?!

அப்பா பரிமளா (ஜெயராம்), அம்மா சுதந்திரம் (ஊர்வசி), மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மற்றும் மதுமிதா (அனந்திகா) என சென்னையில் 'பரிமளா ஃபேமிலி' பட்ஜெட் போட்டு வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். பரிம... மேலும் பார்க்க