செய்திகள் :

லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? - உண்மை என்ன?

post image

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இயக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் பேசியிருந்த அவர், "எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்துக்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன் இணையலாம்.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்குப் பல நன்மைகள் செய்திட முன் வாருங்கள். ஒன்றாகச் சேர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்வோம். உள்ளூர்களில் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

வலிமையும், சிந்தனைகளையும், பங்களிப்புகளையும் மக்கள் இந்த மாநிலத்திற்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஒன்றாகச் சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து நல்ல பல காரியங்களைச் செய்வோம்" எனத் தெரிவித்திருந்தார்.

லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியாவைப் பார்த்து அவர் புதிதாக 'மக்கள் மேடை' என்ற இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் நேற்று இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

கடந்த மார்ச் 7-ம் தேதியே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த 'மக்கள் மேடை' அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இருக்கிறார். இதனை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

நூறு சாமி: "சென்னையை விட்டு போயிருவேன்; இடம் தேடிட்டிருக்கேன்" - என்ன சொல்கிறார் விஜய் ஆண்டனி?

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நூறு சாமி'.இப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்க... மேலும் பார்க்க

What To Watch: 'பரிமளா & கோ' டு 'பேட்ரியாட்' வரை - இந்த வாரம் வெளியான படங்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!பரிமளா அண்ட் கோ - தமிழ்பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் ச... மேலும் பார்க்க

விகடனின் 'லிங்கம்' வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் - மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்!

விகடன் டெலிவிஸ்டாஸின் 'லிங்கம்' வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.இந்த வெப்சீரிஸை லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய... மேலும் பார்க்க

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும், ஆனந்த விகடன் சினிமாவில் விருதுகள் நிகழ்வு நடைபெறும். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவர... மேலும் பார்க்க

'மாற்றத்தை விரும்பும் மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்' - புதிய இயக்கத்தைத் தொடங்கிய லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை இன்று தொடங்கியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். View this post ... மேலும் பார்க்க

பரிமளா & கோ விமர்சனம்: சீரியஸாக காமெடி செய்யும் ஊர்வசி - ஜெயராம் - மிஷ்கின் கூட்டணி பாஸாகிறதா?!

அப்பா பரிமளா (ஜெயராம்), அம்மா சுதந்திரம் (ஊர்வசி), மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மற்றும் மதுமிதா (அனந்திகா) என சென்னையில் 'பரிமளா ஃபேமிலி' பட்ஜெட் போட்டு வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். பரிம... மேலும் பார்க்க