செய்திகள் :

TVK: 'அன்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்; ஆனால், இன்று...' - தவெக-வில் இணைந்த கடம்பூர் ராஜூ

post image

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜூ. அடிப்படையில் ஒரு இடைநிலை ஆசிரியர். இதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.  

எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றினால் ஆசிரியர் பணியிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து முழுநேர அரசியல்வாதி ஆனார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

தொடர்ந்து, 2016-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்ற பெற்ற அவருக்கு தமிழக அமைச்சரவையில் செய்தி மக்கள் தொடர்பு மற்று விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் முறையாக மீண்டும் எம்.எல்.ஏ., ஆனார்.

அ.தி.மு.க., அ,ம,மு.க., மற்றும் சி.பி.எம் என மும்முனைப் போட்டி நிலவிய அந்தத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரனை 12,403 வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தியவர். கோவில்பட்டி தொகுதிக்குள் அவர் சார்ந்த சமூகம் தாண்டி தனக்கெனத் தனி செல்வாக்குடன் வலம் வந்தவர்.

”அரசியலுக்கு விஜய் ஒரு கத்துக்குட்டி. அ.தி.மு.க-வைப் பற்றிப் பேச விஜய்க்கு எந்த உரிமையும் கிடையாது.

பனையூர் அலுவலகத்திற்கு செல்லும் கடம்பூர் ராஜூ
பனையூர் அலுவலகத்திற்கு செல்லும் கடம்பூர் ராஜூ

நான் அமைச்சராக இருந்தபோது விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்தார். நானும் உடன் இருந்தேன். அந்த நன்றி மறந்து அவர் பேசக்கூடாது. ”விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை” என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும் நிலை ஏற்பட்டது.

தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் எனக்கூறி 3 மணி நேரம் காத்திருந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். சாத்தியமே இல்லாத நேரத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தார். நேரில் வந்துவிட்டாரே என விஜய்க்காக உதவியவர் எடப்பாடி பழனிசாமி.

இரவோடு இரவாக பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. ”வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனாக இருப்பேன்” எனச் சொன்னவர்தான் விஜய். ஆனால், இன்று அ.தி.மு.கவை விமர்சனம் செய்கிறார். விஜய்க்கு அ.தி.மு.க பல வழிகளில் உதவி செய்துள்ளது” என்று முந்தைய தேர்தல் பரப்புரை எடப்பாடி பழனிசாமி வீட்டில் விஜய்யுடன் கடம்பூர் ராஜூ அமர்ந்திருக்கும் புகைப்படத்தைக் காட்டிப் பேசினார்.

விஜய்யுடன் கடம்பூர் ராஜூ
விஜய்யுடன் கடம்பூர் ராஜூ

தொடர்ந்து பரப்புரையில் த.வெ.கவையும், விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வந்தார் கடம்பூர் ராஜூ. ''அ.தி.மு.க ஒரு ஆலமரம் அதனை யாராலும் சாய்க்க முடியாது. நான் அம்மாவின் உண்மைத் தொண்டன்'' என்றெல்லாம் பேசிவிட்டு தற்போது த.வெ.க-வில் இணைந்துள்ளதை அ.தி.மு.கவினரே விமர்சித்து வருகின்றனர்.

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க த... மேலும் பார்க்க

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க

CJP: டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் - ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்த... மேலும் பார்க்க

''ஸ்டாலின் தோல்வி அடைந்தது கஷ்டமாக இருக்கிறது" - தேம்பி அழுத சத்யராஜ்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'தமிழாய்வுக்கு பேரறிவுத் தலைவர், கலையாவும் நன்கறிந்த கலைஞர்' என்ற தலைப்பில் ‘புத்தெழுச்சி நாள் ... மேலும் பார்க்க