செய்திகள் :

`ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்! - தவெக-வில் தஞ்சமடைந்த உடுமலை ராதாகிருஷ்ணனின் பின்னணி

post image

உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். விவசாய குடும்ப பின்னணி என்றாலும் கேபிள் டிவியை தனது தொழில் அடையாளமாக கொண்டிருந்தவர்.

அ.தி.மு.க - வில் இணைந்து உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களாக தொடர்ந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்தவர். 2016- ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.‌

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அ.தி.மு.க-வில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்த வந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் 2,882 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோல்வியைத் தழுவினார்.

தற்போது உடுமலை ராதாகிருஷ்ணன் த.வெ.க- வில் தஞ்சமடைந்துள்ளார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்

கட்சி மாறிய பின்னணி குறித்து பேசும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், " திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதால், கட்சித் தலைமை மீது அவர் நீண்ட நாள்களாக வருத்தத்தில் இருந்தார்.‌

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க - வில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான செயல்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நீண்ட யோசனையில் இருந்ததார். புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள த.வெ.க- வில் இணைந்தால் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவும் தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவும் அது வசதியாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான சிலர் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

த.வெ.க- வில் அவருக்கு மாவட்டச் செயலாளர் அல்லது வாரியத் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம்" என்கிறார்கள்.

பிராந்திய அளவிலான நிர்வாகிகளும் தற்போது அதிமுக-வில் இருந்து தவெக செல்வது, அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க

CJP: டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் - ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்த... மேலும் பார்க்க

TVK: 'அன்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்; ஆனால், இன்று...' - தவெக-வில் இணைந்த கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜூ. அடிப்படையில் ஒரு இடைநிலை ஆசிரியர். இதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆர... மேலும் பார்க்க

''ஸ்டாலின் தோல்வி அடைந்தது கஷ்டமாக இருக்கிறது" - தேம்பி அழுத சத்யராஜ்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'தமிழாய்வுக்கு பேரறிவுத் தலைவர், கலையாவும் நன்கறிந்த கலைஞர்' என்ற தலைப்பில் ‘புத்தெழுச்சி நாள் ... மேலும் பார்க்க