ரூ.156-க்கு பதில் ரூ.15,682 அனுப்பிய மும்பைவாசி - காத்திருந்து திரும்ப கொடுத்த ஆ...
கிருஷ்ணகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது; சிக்கியது எப்படி?
கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான திருமணமான இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இங்கு தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்று கொண்டிருந்த நிலையில், அவர் வயிறு வீக்கமடைந்ததைப் பார்த்து உறவினர்கள் விசாரிக்க, அதைப்பற்றி அப்பெண்ணுக்கு எதுவும் தெரியாத நிலையில் வயிற்றில் கட்டி உருவாகியிருக்குமோ என்ற சந்தேகத்தில் ஊத்தங்கரையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட இன்ஸ்பெக்டர் வளர்மதி உள்ளிட்ட போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தினமும் ஆடு மேய்க்க அப்பெண் செல்லும்போது, அவரைப்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வரும் மிட்டப்பள்ளியைச் சேர்ந்த 53 வயதான கோவிந்தசாமி என்பவர் நல்லவிதமாகப் பழகி வந்திருக்கிறார்.
பின்பு அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் காரணமாக அவர் கர்ப்பமாகியுள்ளது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியிருந்த கோவிந்தசாமியை தருமபுரி மாவட்டம் முத்தானூர் பகுதியில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















