செய்திகள் :

பூவே உனக்காக முதல் குஷி வரை: 90ஸ் விஜய்யின் தீவிர ரசிகர் பகிரும் பசுமையான தியேட்டர் நினைவுகள்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

இந்தப் பதிவில் 90களில் இளைய தளபதி என்றும் இன்று 2K கிட்ஸ்களால் தளபதி என்று கொண்டாடப்படும் விஜய் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த எனக்கு மிகவும் பிடித்த சில படங்களின இனிய ஞாபகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1992 ஆம் ஆண்டு அவர் கதாநாயகனாக அவருடைய அப்பா இயக்கத்தில் வெளிவந்த நாளைய தீர்ப்பு முதல் வெளிவர இருக்கும் ஜனநாயகன் படம் வரைக்கும் 69 படங்களில் தளபதி அவர்கள் நடித்து முடித்துள்ளார். இதில் நான் ஏறக்குறைய குறைந்தது 50க்கும் மேலான படங்களை தியேட்டரில் மட்டுமே கண்டு ரசித்திருக்கிறேன் என்று ஒரு விஜய் ரசிகனாக இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

இதில் ஒரு முக்கியமான, குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் நடித்து முடித்துள்ள 69 படங்களில் ஒரு சில படங்களை இதுவரையில் நான் தியேட்டரில் அல்லது டிவிில பார்க்கவில்லை, மிஸ் செய்துவிட்டேன். நான் பார்க்காமல் மிஸ் செய்த படங்களின் பெயர்களை இந்த பதிவின் முடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுபோல நீங்களும் இளையதளபதி விஜய் அவர்கள் நடித்து இதுவரையில் பார்க்காமல் மிஸ் செய்த படங்களை கமெண்ட்சில் பதிவு செய்யுங்கள்.

குஷி #VikatanReview

விஜய் நடித்த படங்கள் என்னை கவர்ந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவருடைய நளினமான, க்யூட்டான, வேகமான நடனங்கள். அவர் பல நடன இயக்குனர்களுடன் இணைந்து பல பாடல்களில் ஆடியுள்ளார். அந்த நடனங்கள் சூப்பர் பாஸ்ட் ஆகவும், க்யூடாகவும் இருக்கும். அவருடைய பல படங்களின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தது அவருடைய படத்தின் பாடல்கள். ஆம், குறிப்பாக மூன்று இசையமைப்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பாடல்களை அவருக்கு கொடுத்துள்ளார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அது என்னவென்றால் ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அவன் சார்ந்திருக்கும் தொழில்துறையில் பல வெற்றிகளை குவிப்பதற்கும் அந்த மனிதனுடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏன் என்றால் நமக்கு பல உதவிகள் அறிவுரைகளை பலர் நமக்கு வழங்கி இருந்தாலும், நாம் எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அவமானப்படுத்தப்படும் போதும், உதாசீனப்படுத்தப்படும் போதும், நிராகரிக்கப்படும் போதும் அதே துறையில் அந்த மனிதர்களுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை வாழ்க்கையில் பதிவு செய்ய வேண்டும் என்ற வெறி ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்படும்.

அது போல தான் தளபதி விஜய் அவர்களுக்கு தான் நடித்த முதல் படம் வெளியான போது இதெல்லாம் ஒரு மூஞ்சி இவனெல்லாம் நடிக்க வந்து விட்டான் என்று பலர் அவரை அவமானபடுத்தியும், மட்டம் தட்டியும் பேசினார்கள். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒரு இதழில், இவர் ஏன் நடிக்க வந்தார் இவர் முகத்தை கண்ணாடியில் பார்த்து இருக்கிறாரா, கதாநாயகனுக்கு உரிய முகம் இல்லை, இவருக்கு ஏன் இந்த வேலை என்று ரீதியில் ஒரு கட்டுரையை, இந்த அரைவேக்காட்டுத்தனமான, கேலித்தனமான, நையாண்டிகளை புறந்தள்ளிவிட்டு விஜய் அவர்கள் கடுமையாக உழைத்தார்.

அதற்காக அவர் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டார்.  படங்களில், இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பது உங்கள் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் பாடி அசத்தினார். 

பூவே உனக்காக

எனக்கு மிகவும் பிடித்த தளபதி படங்களை, அந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் படமாக நான் கூறுவது பூவே உனக்காக படம். 

பூவே உனக்காக படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில்,  விக்ரமன் அவர்கள் இயக்கி 1996 ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றிப்படமாக, முதல் வெள்ளி விழா படமாக விஜய் அவர்களுக்கு அமைந்தது. குறிப்பாக, இந்தப் படத்தின் மூலம் அவர் பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தார். ஏன் இந்த படத்தை நான் குறிப்பிட்டு கூறுகிறேன் என்றால், அதற்கு முன்பு அவர் தனது தந்தையின் டைரக்ஷனில் சில படங்களில் நடித்திருந்தாலும், படங்கள் ஒரு ஆவரேஜ் வெற்றியை பதிவு செய்திருந்தது, அவைகள் முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் மசாலா படமாக இருந்தன அது ஆண் ரசிகர்களையே கவர்ந்திருந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படமாக பூவே உனக்காக படம் அமைந்தது, இந்தப் படத்தை எங்கள் புதுச்சேரி  பீச் ரோட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த அஜந்தா தியேட்டரில் பார்த்த ஞாபகம் இன்றும் என் மனதில் பசுமையாக நிறைந்துள்ளத. ஏனென்றால்,  இப்போது அந்த தியேட்டர் அங்கு இல்லை.

இதுபோல் நீங்கள் உங்கள் ஊரில் எந்த தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்தீர்கள் என்ற ஞாபகம் உங்கள் மனதில் இருந்தால் அந்த தியேட்டரின் பெயரை பதிவிடவும்.. மற்றும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது எஸ்ஏ ராஜ்குமார், இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் என்று தொடங்கும் பாடல், இன்று வரையில் காலம் கடந்து நிற்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது படமாக இங்கே நான் குறிப்பிடுவது விஜய் நடித்த லவ் டுடே படம்.

இந்த படம் விஜய் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இப்படத்தை பாலசேகரன் என்பவர் இயக்கியிருப்பார். தன் நடிப்பால் பல இடங்களில் ரசிகர்களை படத்தின் கதை ஓட்டத்துடன் ஒன்றிணைய செய்திருப்பார். மேலும் இப்படத்தில் விஜய் அவர்களின் ஹேர் ஸ்டைல் படத்தில் வித்தியாசமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் படத்தின் பல காட்சிகளில் கண் கண்ணாடியை அணிந்தே நடித்திருப்பார். அது ஒரு பவ்யமா, அழகான லுக் அவருக்கு கொடுத்திருக்கும். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ஒரு புதுமுகம். அவரின் பெயர் சிவா. இந்த இசையமைப்பாளரின் பெயர் இன்று வரை பலருக்கு தெரியவில்லை. அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக, ஏன் பெண் என்று பிறந்தாய் போன்ற பாடல்கள்  இன்றும் ரசிகர்களால் விரும்பப்படும் பாடலாக உள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு  பெரிய காரணமாக அமைந்தது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாகும்.. இப்படத்தை இதுவரைக்கும் பார்க்காதவர்கள் இப்போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

காதலுக்கு மரியாதை! #VikatanReview

எனக்கு பிடித்த தளபதி படங்கள் வரிசையில் நான் குறிப்பிடும் மூன்றாவது படம் காதலுக்கு மரியாதை

இந்த படத்தின் வெற்றி இமாலய வெற்றி என்று கூறலாம். ஏனென்றால், இந்த படம் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கையை உலக அளவில் உயர்த்த சிறந்த படமாக அமைந்தது. குறிப்பாக, இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மிக இயல்பாகவும் அனைத்து தரப்பு மக்கள் விரும்பும் கிளைமாக்ஸ் காட்சியாக அமைந்தது. குடும்பங்கள் கொண்டாடிய ஒரு காதல் படமாக இப்படம் அமைந்தது. ஒரு சில படங்களுக்கு மட்டுமே மக்கள் கிளைமேக்ஸ் காட்சியில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அந்த மகிழ்ச்சிகரமான சம்பவம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு கிடைத்தது. இப்படத்தை முதல் வாரத்திலேயே இரண்டு முறை தியேட்டரில் பார்த்தது பசுமையாக நினைவில் உள்ளது. 

இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் கிடைத்தது.  இப்படத்திற்கு இசையமைத்தது இசை கடவுள், இசைஞானி இளையராஜா. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக என்னை தாலாட்டு வருவாளா பாடல் இன்று வரை பல இசைக்கச்சேரிகளில் பாடப்படுகிறது. 

தளபதி விஜயின் ஆரம்பகால படங்களை குறிப்பாக, 90களில் பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனமாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் திகழ்ந்தது. இதுவரையில் அந்த சாதனையை வேறு எந்த "தயாரிப்பு" நிறுவனங்களும் விஜயுடன் இணைந்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து அந்தச் சாதனையை தகர்த்து எரியவில்லை.

விஜய் அவர்கள் நடித்த எனக்கு மிகவும் பிடித்த நான்காவது படமாக நான் குறிப்பிடுவது துள்ளாத மனமும் துள்ளும் படமாகும். 

இப்படத்தின்  இசையும் எஸ்ஏ. ராஜ்குமார் ஆகும். இன்றுவரை எனக்கு மிகவும் பிடித்த விஜய் படங்களில் இது முக்கியமான படம். இப்படத்தில் விஜய் அவர்கள் குட்டி என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக சிறப்பாக நடித்திருப்பார். படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். அதிலும் குறிப்பாக இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு மற்றும் 20 கோடி நிலவுகள் சேர்ந்து பெண்மை போன்ற பாடல்கள் இன்று வரை என்னுடைய ஃபேவரைட் சாங் களில் ஒன்று.

துள்ளாத மனமும் துள்ளும்

என்னைக் கவர்ந்த ஐந்தாவது படமாக நான் குறிப்பிடும் படம் குஷி படமாகும்.

இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வெளியான இரண்டு படங்கள் பெரிய அளவில் விஜய்க்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் குறைகளை போக்கும் விதமாக இப்படம் அமைந்தது. ஏனென்றால், இப்படத்தை இயக்கி இருந்தது இப்போது நடிப்பு அரக்கன் என்று எல்லாராலும் கொண்டாடப்படும் எஸ் ஜே சூர்யா.  இப்படத்தில் இருந்து விஜய்க்கு வேறு ஒரு ஸ்டைலிஷ் ஆன லுக் கிடைத்தது. இந்தப் படத்தில் விஜய் மிக அழகாகவும், ஸ்டைல் ஆகவும் இருப்பார்.  இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த படத்தின் பாடல்கள். அனைத்தும் சூப்பர் ஹிட், படத்திற்கு இசை  தேனிசைத் தென்றல் தேவா. இப்படத்தில் அனைத்து பாடல்களிலும் விஜய் மிகச் சிறந்த நடனத்தை ஆடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்திருப்பார். 

நம்ம தளபதி விஜய் அவர்கள் நடித்து இதுவரை நான் முழுமையாக தியேட்டரில் அல்லது டிவிலோ இதுவரை பார்க்காத படங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று இப்பதிவின் தொடக்கத்தில் கூறியிருந்தேன் அல்லவா அதில் நான் மிஸ் செய்த படங்களின் பட்டியல் நாளைய தீர்ப்பு, ராஜாவின் பார்வையில், சந்திரலேகா, வசந்த வாசல் ஆகிய படங்களாகும் இதில் ராஜாவின் பார்வையில் படத்தில் தளபதியும், தலையும் சேர்ந்து நடித்திருப்பார்கள். இங்கே நான் குறிப்பிட்ட அனைத்து படங்களும் இளைய தளபதியை தளபதியாக மாற்ற பெரும் பங்கு வகித்த படங்களாகும். 

இப்படிக்கு அன்புடன் 

S.Saravanan, புதுச்சேரி 

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

அசுர உழைப்பால் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியான விஜய் - எமோஷனல் பகிர்வு!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தியேட்டருக்கே போனதில்ல.. ஆனா 'போக்கிரி' படத்தை 100 முறை பார்த்திருக்கேன் - இலங்கை ரசிகையின் மடல்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இளைய தளபதி விஜய் திகழ்கிறார். அவரது இயற்பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர். சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்த அவர், தனது கடின உழைப்பு மற்றும் திறமையா... மேலும் பார்க்க

'விஷ்ணு' தந்த அண்ணன்... 'போக்கிரி' தந்த கொண்டாட்டம் - பாசக்கார தங்கையின் நெகிழ்ச்சிப் பகிர்வு!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பூவே உனக்காக டூ லியோ: மூன்று தசாப்தங்களாகத் தமிழ் சினிமாவை ஆளும் திரை ஆளுமை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`வெறும் காட்சிப் பொருளா ஜான்வி கபூர்?' 'PEDDI' படத்திற்கு எதிராக குவியும் விமர்சனங்கள்

ராம் சரண் - ஜான்வி கபூர் நடிப்பில், ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'பெத்தி' திரைப்படம், வெளியானதில் இருந்தே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் ஜான்வி கபூர் நடித்... மேலும் பார்க்க

​இளைய தளபதி `டு' தளபதி - விஜய்-க்கு வாழ்த்துகளையும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

மை விகடன் (My Vikatan) தளத்தில் முதல்வர் விஜய்யின் திரைப் பயணத்தை பற்றி உங்கள் கருத்தைக் கட்டுரைகளாக எழுதி அனுப்புங்கள்!தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையான நடிகர் விஜய், தற்போது தமிழ் மக்களின் நெஞ்சில் க... மேலும் பார்க்க