செய்திகள் :

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.

இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களைக் குறிப்பாக மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்" என்றார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "த.வெ.க இப்போதுதான் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

யாராக இருந்தாலும் ஊடகங்களை, பத்திரிகைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும். மதசார்பற்றக் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுதான் த.வெ.கவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பற்றி நாளை சிந்திக்கலாம். இப்போது த.வெ.க நல்லாட்சி தர வேண்டும். வெளியில் இருந்து நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தருகிறோம்.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

நாங்கள் இந்தியக் கூட்டணியில் இருக்கிறோம். ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்கள் தேசிய தலைவர்கள் அதில் கலந்துகொள்வார்கள்.

பிரவீன் சக்ரவர்த்தி எங்களை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தார். 'நான் வெளியிட்ட பதிவு தவறுதான். அதைப் பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்" என்று கூறியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: ``அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" - தமிழிசை காட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றாததால், பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர்... மேலும் பார்க்க

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க த... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க

CJP: டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் - ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்த... மேலும் பார்க்க

TVK: 'அன்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்; ஆனால், இன்று...' - தவெக-வில் இணைந்த கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜூ. அடிப்படையில் ஒரு இடைநிலை ஆசிரியர். இதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆர... மேலும் பார்க்க