செய்திகள் :

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: ``அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" - தமிழிசை காட்டம்

post image

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றாததால், பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

இது தொடர்பாக திருப்பரன்குன்றம் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ``மலை மீது கார்த்திகையின் போது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். அமைதியான சூழல் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்; அரசின் நிலைப்பாடும் அதுதான்" என்றார்.

இது தொடர்பாக பா.ஜ.க மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``மதுரையில் தமிழக மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பேட்டியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவதை ஏதோ அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதைப் போல உருவகப்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலைமை இருந்ததோ அதைத்தான் கடைப்பிடிப்போம் என்று சொல்கிறாரே. ஏன் மாற்றம் வேண்டும் என்று கேட்கிறாரே

தவெக நிர்மல் குமார்

அப்படி என்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் என்ன நிலைமை இருந்ததோ அந்த நிலைமை இருக்கட்டும் என்றால் நீங்கள் எல்லாம் எப்படி வந்தீர்கள் ஏன் வந்தீர்கள் என்று தமிழக மக்கள் கேட்கலாமா? திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது. ஏதோ நீங்கள் எல்லாம் அவசர காலத்தில் அடித்த விசில் சத்தத்தில் வெற்றி பெற்று விட்டீர்கள். அதனால் உரிமைக்காகப் போராடும் மக்களின் உரத்த குரல் உங்கள் காதில் விழாது.

அதுமட்டுமல்ல அமைச்சரின் பேட்டி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையோ வழக்கத்தையும் மதித்ததாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல மக்களுக்கு வேண்டியவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கும் பொழுது எல்லா தலைவர்களும் பேட்டி கொடுக்கும் முறையை கையாளுகிறார்கள். ஆனால் அந்த முறையையும் மின்சார அமைச்சர் கொச்சைப்படுத்துகிறார்.

முதலில் பத்திரிகையாளர்கள் இதற்கு எதிர்ப்பு கேள்வி கேட்டிருக்க வேண்டும். தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்கே பலர் பத்திரிகையைச் சந்திப்புகளைச் சந்திக்கிறார் என்று பத்திரிகையாளர்களை மதித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துபவர்களை இவர் கொச்சைப்படுத்துகிறாரா?

இன்றைய தொழில்நுட்ப முறைகளினால் தங்கள் வெற்றியைப் பெற்று விட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகை அறிக்கைகள் தான் இருந்தது. இந்த ஊடகங்கள் எல்லாம் தேவையில்லை என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

ஆக தமிழக வெற்றிக் கழகக் கட்சி சார்ந்த அமைச்சர்கள் யாரும் தங்கள் துறையில் உள்ள பிரச்னைகளைப் பார்க்காமல் சரியாக அணுகாமல், தமிழகத்தின் உணர்வு பூர்வமான பிரச்னைகளை மேம்போக்காக அணுகி பேட்டிகள் கொடுப்பது அவர்களுக்கு தமிழக மக்களின் மீது அக்கறையின்மையே காண்பிக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் எண்ணத்தை விட முதலில் தமிழகத்தின் நிலவும் மின்வட்டையும் அந்தத் துறையில் உள்ள முறைகேடுகள்கேடுகளையும் களைவதில் அமைச்சர் அக்கறை செலுத்தினால் நலமாக இருக்கும்.

விளக்கேற்றுவோம் ஒளி வேண்டும் என்கிறார்கள் மக்கள். மின்வெட்டு ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டாக்குவோம் என்கிறார் அமைச்சர்" எனக் குறிப்பிட்டிருகிறார்.

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் த.வெ.கவில் இன்று இணைந்திருக்கின்றனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜ... மேலும் பார்க்க

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ - பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலைகளுக்குச் செல்ல அரசுப் பேருந்தையே பயன்படு... மேலும் பார்க்க

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க த... மேலும் பார்க்க

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க