செய்திகள் :

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ - பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

post image

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலைகளுக்குச் செல்ல அரசுப் பேருந்தையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், அண்ணா நகரில் இருந்து மிகச் சில பேருந்துகளே இயக்கப்படும் நிலையில், பக்கத்திலுள்ள கெம்பனூர் கிராமத்தில் இருந்து சீரான இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கெம்பனூர் பகுதிக்கு அதிகமாக இயக்கப்படும் ’21’ என்ற எண் கொண்ட பேருந்தை அண்ணா நகர் வரை நீட்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், ”இவங்க எல்லா உட்கார்ந்து வரும்போது, நாங்க நின்னுட்டு வரணுமா?” என்ற ஆதிக்கசாதியினரின் எதிர்ப்பால், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கடந்த அ.தி.மு.க, தி.மு.க. ஆட்சிகளில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக, மற்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அண்ணா நகருக்கு திருப்பி விடப்பட்டது. ஆனாலும் ’21’ என்ற பேருந்து மட்டும் அண்ணா நகர் பகுதிக்கு நீட்டிக்கப்படாமல் இருந்தது.

அண்ணா நகருக்கு இயக்கப்பட்ட பேருந்து
அண்ணா நகருக்கு இயக்கப்பட்ட பேருந்து

இவ்விவகாரம் தொடர்பாக அண்மையில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, “பேருந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து இன்று மதியம் முதல் ‘21’ என்ற பேருந்து அண்ணா நகரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணியளவில் கெம்பனூர் வந்த அப்பேருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அண்ணா நகர் இயக்கப்பட்டது. பின்னர் பயணிகளுடன் அங்கிருந்து கிளம்பி சென்றது. இது அக்கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அண்ணா நகரை சேர்ந்த ஜெயக்குமார் கூறுகையில், “கெம்பனூர் வரை இயங்கி வந்த 21 எண் பேருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணா நகர் வரை இயக்க வேண்டும் என்பது எங்களின் 15 ஆண்டு கனவு. அது மாற்று சாதியினர் எதிர்ப்பால் நிறைவேறாமல் இருந்தது. பேருந்து என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சாதிய அடையாளம் வைத்து ஒரு பேருந்தை அவர்கள் சொந்தம் கொண்டாடியதோடு, எங்களது பகுதிக்கு வர விடாமல் தடுத்தது நவீன தீண்டாமையாக இருந்தது. பேருந்து எங்கள் பகுதிக்கு வருவதற்கான சாதிய தடையை அமைச்சர் வன்னிஅரசு உடைத்து, பேருந்து வர நடவடிக்கை எடுத்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த பேருந்து எந்த தடையுமின்றி அண்ணா நகரில் இருந்து இயக்க வேண்டும்” என்றார்.

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் த.வெ.கவில் இன்று இணைந்திருக்கின்றனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: ``அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" - தமிழிசை காட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றாததால், பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர்... மேலும் பார்க்க

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க த... மேலும் பார்க்க

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க