செய்திகள் :

ரூ.156-க்கு பதில் ரூ.15,682 அனுப்பிய மும்பைவாசி - காத்திருந்து திரும்ப கொடுத்த ஆட்டோ டிரைவர்!

post image

இப்போது அனைத்து தேவைகளுக்கும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது. தேநீர் கடை, நடைபாதை வியாபாரிகள் என அனைவரும் ஆன்லைன் மூலம் பணம் பெறும் வசதியை வைத்திருக்கின்றனர். இப்போது அதிகமானோரிடம் பணமே கையில் இருப்பது கிடையாது. எந்த செலவாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் செய்கின்றனர்.

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுபம் என்பவர் ஆட்டோவில் பயணம் செய்தார். அவர் ஆட்டோவில் இருந்து இறங்கிய பிறகு அதற்கான பணத்தை அவசரமாக ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு சென்றுவிட்டார்.

அவர் சர்வதேச வாடிக்கையாளர் ஒருவரை பார்க்க சென்றார். ஆனால் அங்கே அந்த வாடிக்கையாளரை பார்க்க முடியாமல் வெளியில் வந்தபோது அவரை இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

சுபம் வெளியில் வந்ததும் அவரை அழைத்து, `அதிக அளவில் பணம் அனுப்பிவிட்டீர்கள்' என்று கூறி சுபம் அனுப்பிய ரூ.15682 ஐ அப்படியே திருப்பி அனுப்பி விட்டார். ஆட்டோ டிரைவருக்கு கொடுக்க வேண்டிய தொகை ரூ.156 மட்டுமேயாகும். அந்த தொகையை கூட ஆட்டோ டிரைவர் அல்தாப் எடுத்துக்கொள்ளவில்லை.

சுபம் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து LinkedIn யில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ``ஒரு நாள் ஒரு சர்வதேச வாடிக்கையாளரை சந்திப்பதற்கான காலை 7 மணி மீட்டிங்கிற்கு தாமதமாக வந்ததால், அவசரத்தில் ஆட்டோ சவாரிக்கு கொடுக்க வேண்டிய 156 ரூபாயை கூகுள் பே மூலம் பணம் செலுத்திவிட்டு அவசரமாக சென்றுவிட்டேன். ஆனால் நான் ரூ.156க்கு பதில் 15682 ரூபாயை தவறுதலாக செலுத்தி இருந்தேன். பணம் செலுத்திய பிறகு எவ்வளவு செலுத்தினேன் என்று பார்க்காமல் சென்றுவிட்டேன்.

நான் சந்திப்பதற்காக சென்ற சந்திப்பும் நடக்கவில்லை. எனவே அதிருப்தியுடன் திரும்பி வந்தபோது என்னை இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவர் என்னை அணுகி நான் பணம் அதிகமாக செலுத்திவிட்டதாக கூறி நான் அனுப்பிய தொகை முழுவதையும் எனக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அவருக்கான ஆட்டோ கட்டணத்தை எடுத்துக்கொள்ளும்படி கூறினேன். அதனையும் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு ரூ.500 அனுப்பி வைத்ததாகவும் சுபம் குறிப்பிட்டுள்ளார். ஆட்டோ டிரைவரின் செயலை நெட்டிசன்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இப்படியும் சில ஆட்டோ டிரைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

`கட்டாய மதமாற்ற முயற்சி; துன்புறுத்தல்' - விப்ரோ நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் `பகீர்' புகார்

சமீபத்தில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றம் போன்ற சம்பவங்கள் நாசிக் அலுவலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர். நாடு முழுவதும் பெர... மேலும் பார்க்க

ஈரோடு: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய மாணவர்கள்; ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள் - Album

ஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் ... மேலும் பார்க்க

மும்பை: வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி; 948 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு... பத்திரமாக மீட்ட போலீஸ்!

மும்பை திவா பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து அவர் பெற்றோர் போலீஸில் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசா... மேலும் பார்க்க

`ஷாருக் கானுக்கு கிரிக்கெட்டே பிடிக்காது; அவரை கொல்கத்தா அணியின் உரிமையாளராக்கினேன்..!'- லலித் மோடி

இன்றைக்கு இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்கு அதன் முன்னாள் தலைவர் லலித் மோடிதான் முக்கிய காரணம் ஆகும். அவர் தான் பாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து ஐ.பி.எல். அணிகளை விலைக்கு வாங்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 55 லட்சம் விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி; யார், யாருக்கு எவ்வளவு?

கடந்த 2024ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று கூறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க