செய்திகள் :

EPFO, ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை.! இந்த ஜூலை மாதத்திற்கான 'செக்லிஸ்டை' தெரிஞ்சுக்கோங்க!

post image

2026-ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் காலடி எடுத்து வைக்கிறோம் இன்று.

இன்று (ஜூலை 1) முதல் இந்திய நிதித் துறை சார்பாக நாம் என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும் இங்கே பார்த்துவிடுவோம். வாங்க...

> ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வலைதளம் மற்றும் UMANG ஆப் ஆகியவை முழுவதும் அப்கிரேட் செய்யப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி (PPF)
வருங்கால வைப்பு நிதி (PPF)

இந்த அப்கிரேடிற்குப் பிறகு, இந்த வலைதளம் மற்றும் ஆப்பில் அனைத்து சேவைகளையும் விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

EPFO மற்றும் UMANG ஆப்பின் அப்கிரேட் வெர்ஷன் நாளை (ஜூலை 2, 2026) முதல் ஓபனாகிறது.

> வருகிற டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை, ஆதார் வலைதளம் மற்றும் ஆப்கள் மூலம் ஆதாரில் இமெயில் ஐ.டியை கட்டணமில்லாமல் அப்டேட் செய்துகொள்ள முடியும்.

இந்த வசதி இன்று முதல் முடிவடைவதாக இருந்தது. ஆனால், தற்போது இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

> கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் சாதாரண பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் ரூ.2,500 ஆகவும், தட்கல் பாஸ்போர்ட் ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு விலை பட்டியலையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

> ITR-1 மற்றும் ITR 2-க்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதி வருகிற ஜூலை 31-ம் தேதி.

இந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டால், எந்த அபராதமும் இருக்காது.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் | ITR Filing
வருமான வரிக் கணக்குத் தாக்கல் | ITR Filing

> வங்கிகள் தவறான வாக்குறுதிகளை அளித்து நிதி சார்ந்த திட்டங்கள் அல்லது பொருட்களை விற்பனை செய்வதைத் (Mis-selling) தடுக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிகளை அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின் படி, ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய முழுத் தொகையும் திருப்பித் தரப்படுவதோடு, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படும்.

இதுவும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இன்டெக்ஸ் ஃபண்டுகளே போதும் என்று நினைத்து முதலீடு செய்வதால் அதிக லாபத்தை அடைய முடியுமா?

இந்தியாவில் நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சு... மேலும் பார்க்க

ITR தாக்கலில் வருமான கணக்கை தவறாக காட்டினால்... தாமதமாக தாக்கல் செய்தால் என்ன அபராதம்?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை தவறும் போதும், தாக்கல் செய்யும் போது சில தவறுகளை செய்வதாலும் வருமான வரித் துறை நமக்கு அபராதங்களை விதிக்கும். அந்த அபராதங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...பிரிவு ... மேலும் பார்க்க

இரண்டு சம்பளம் வாங்கும் கணவன் மனைவியா? ₹1 கோடி ஈஸியா சேர்க்கும் வழி இதுதான்!

மாதம் பிறந்தால் இரண்டு சம்பளம் அக்கவுண்ட்டில் விழுகிறது. ஐடி பார்க், ஏசி காற்று, வார இறுதியில் மால், காபி ஷாப் என வாழ்க்கை சொகுசாகத்தான் நகர்கிறது. 35 வயதைத் தாண்டிய இரட்டை வருமானத் தம்பதிகளுக்கு வெளி... மேலும் பார்க்க

40 வயதில் முதலீடு; 10 ஆண்டுகளில் ₹2.3 கோடி; வளைகுடா NRI-களுக்கான பிளான் என்ன?

வணக்கம். வளைகுடா நாட்டின் தகிக்கும் வெயிலையும், குடும்பத்தைப் பிரிந்திருக்கும் ஏக்கத்தையும் கடந்து நீங்கள் தினமும் உழைக்கிறீர்கள். நாற்பது வயதைக் கடந்த உங்களுக்கு, உழைப்பின் முக்கியத்துவம் மட்டுமல்ல, ... மேலும் பார்க்க

'சொந்த வீடு வேண்டாம்; வாடகை வீடே போதும்.!' - இன்றைய இளைஞர்கள் இப்படி யோசிக்க என்ன காரணம்?

புதிதாக வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே வங்கிக் கடனில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அண்மைக் காலம் வரை இளைஞர்களின் சிந்தனைப் போக்காக இருந்தது. ஆனால், சமீப காலமாக 'சொந்த வ... மேலும் பார்க்க

Personal Finance: இந்த மாதிரி பட்ஜெட் போட்டா, 10 வருஷத்துல ₹23 லட்சம் சேர்க்கலாம்!

"நாம என்ன தப்பு பண்றோம், நம்மளால ஒரு நாளும் பெரிய ஆளாக முடியாதா?"ங்கிற அந்த ஒரு பயமும், குற்ற உணர்ச்சியும் மனசை அப்படியே அமுக்கும் பாத்தீங்களா... அது ரொம்பக் கொடுமையானது.நிஜத்தைச் சொல்லணும்னா, தப்பு உ... மேலும் பார்க்க