செய்திகள் :

FIFA: பழிதீர்க்குமா மொராக்கோ? இங்கிலாந்தை வீழ்த்துவாரா ஹாலண்ட்? - அனல் அடிக்கும் காலிறுதி ஆட்டங்கள்!

post image

கடைசி நிமிட கோல்கள், அதிர்ச்சித் தோல்விகள், நம்பமுடியாத கம்பேக்குகள், ஜாம்பவான்களின் கண்ணீருடன் கூடிய பிரியாவிடை என அத்தனை உணர்ச்சிகளையும் ஒருங்கே கொட்டி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்று ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத விருந்தை படைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டியை நோக்கிய பயணம் இப்போது வெறும் எட்டு அணிகளுக்குள் சுருங்கியுள்ளது. காலிறுதிச் சுற்றில் அரங்கேறவிருக்கும் போட்டிகள், கால்பந்து உலகில் அனலைப் பறக்கவிடக் காத்திருக்கின்றன.

நெய்மர்

இந்த நாக் அவுட் சுற்றின் மிகப்பெரிய அதிர்ச்சி நியூ ஜெர்சியில்தான் அரங்கேறியது. ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணியை நார்வே வீழ்த்தி உலகையே திகைக்க வைத்தது. இளம் புயல் எர்லிங் ஹாலண்ட் அடித்த இரண்டு கோல்கள், பிரேசிலின் உலகக் கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்த நெய்மர், கண்ணீருடன் சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார்.

இதேபோல், மற்றொரு கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணமும் ஒரு சோகமான முடிவைச் சந்தித்தது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிடத்தில் மைக்கேல் மெரினோ அடித்த கோலால், போர்ச்சுகல் அணி பரிதாபமாக வெளியேறியது.

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இந்தத் தொடரின் மிகச்சிறந்த கம்பேக்கைப் பதிவுசெய்தது. எகிப்துக்கு எதிரான போட்டியில் 2-0 என பின்தங்கியிருந்த நிலையில், கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் மாயாஜாலத்தால் ஆட்டம் தலைகீழாக மாறியது. வெறும் 13 நிமிடங்களுக்குள் மூன்று கோல்களை அடித்து, தோல்வியின் பிடியிலிருந்து வெற்றியைத் தட்டிப் பறித்தது அர்ஜென்டினா.

மறுபுறம், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணி, பராகுவேயின் இரும்புக்கோட்டை போன்ற தடுப்பாட்டத்தைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டது. இறுதியில், கிலியன் எம்பாப்பே அடித்த பெனால்டி கோல் பிரான்ஸ் அணியைக் காலிறுதிக்கு அழைத்துச் சென்றது.

மெஸ்ஸி
மெஸ்ஸி

கத்தாரில் நடைபெற்ற கடந்த உலகக்கோப்பையில் விட்ட இடத்திலிருந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்த மொராக்கோ, நாக் அவுட் சுற்றில் தொடரை இணைந்து நடத்தும் கனடாவை எளிதாக வீழ்த்தியது. ஆப்பிரிக்காவின் 'அட்லஸ் சிங்கங்கள்' மீண்டும் ஒருமுறை தங்களின் பலத்தை நிரூபித்துள்ளன.

மற்றொரு போட்டியில், சர்ச்சைகளுக்கு நடுவே அமெரிக்காவை எதிர்கொண்ட பெல்ஜியம், 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. கடைசி நாக் அவுட் போட்டியில், கொலம்பியாவை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி முதல் முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

இனிவரும் ஒவ்வொரு போட்டியும் அதி முக்கியம் என்பதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2022 அரையிறுதித் தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது மொராக்கோ.

ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான மோதல், ஐரோப்பிய கால்பந்தின் தந்திரோபாய யுத்தமாக அமையும்.

நார்வேயின் கனவுப் பயணத்திற்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போடுமா? ஹாலண்ட் மற்றும் ஹாரி கேன் இடையேயான பலப்பரீட்சை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

எகிப்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பிறகு, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, சுவிட்சர்லாந்தை நிச்சயம் எளிதில் அணுகாது.!

காலிறுதிப் போட்டி அட்டவணை (இந்திய நேரப்படி):

பிரான்ஸ் vs மொராக்கோ: ஜூலை 10, அதிகாலை 1:30 மணி

ஸ்பெயின் vs பெல்ஜியம்: ஜூலை 11, நள்ளிரவு 12:30 மணி

நார்வே vs இங்கிலாந்து: ஜூலை 11, அதிகாலை 2:30 மணி

அர்ஜென்டினா vs சுவிட்சர்லாந்து: ஜூலை 12, காலை 6:30 மணி

FIFA: "வலி அளவற்றது, இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும்" - தோல்வி குறித்து மெஸ்ஸி எமோஷனல்

ஸ்பெயின் - அர்ஜெண்டினாவிற்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின். ஸ்பெயின் இறுதிப்போட்ட... மேலும் பார்க்க

Keyne: உலகக் கோப்பையில் லமின் யமாலைவிட அதிகம் வைரலான இந்த குட்டி பையன் யார் தெரியுமா?

அர்ஜென்டினாவை 1-0 என்ற Goal கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஸ்பெயின். இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிதான் பேசுபொருளாக இருந்தாலும், அதே அளவுக்கு ரசி... மேலும் பார்க்க

ஆட்டம் மொத்தமும் ஸ்பெயின் வசமே... அர்ஜென்டினாவை அடிச்சு தூக்கி சாம்பியன் ஆனது எப்படி?

ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவிற்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்.நியூயார்க் நியூ ... மேலும் பார்க்க

"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!" – லியோனல் மெஸ்ஸி உருக்கம்

உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்கியமான நேரத்தில், அ... மேலும் பார்க்க

கடைசி நிமிடம் வரை திக் திக் : இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !

அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து க்கு இடையேயான கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா.அட்லான கால்பந்து மைதானத்தில் நடந்த இப்போட்டியில... மேலும் பார்க்க